அமெரிக்கா, ஹோட்டலில் காரசாரமாக் ‘திருடி’ச் சாப்பிட்ட கரடி: சிசிடிவியால் சிக்கியது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் தினமும் மீதமாகும் உணவுகளை திருட்டுத் தனமாக கரடி ருசித்து வந்தது ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.

பொதுவாக வீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் தான் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் சாப்பிடும் உணவிற்கு அடிமையாவது சகஜம். ஆனால், அமெரிக்காவில் காட்டில் வாழும் கரடி ஒன்று தினமும் இரவு அங்குள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் பின்பக்க கதவு வழியாக ரகசியமாக உள்ளே நுழைந்து அங்கு மீதமாகியுள்ள உணவுகளைப் போட்டு வைத்திருக்கும் பெட்டியில் உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலோராடோ ஸ்பிரிங் பகுதியில் உள்ளது எடல்வெய்ஸ் ரெஸ்டாரண்ட். இங்கு காரசாரமான உருளைக்கிழங்கு, ரொட்டி மற்றும் ஊறுகாய் வகை உணவுகள் பிரபலம். இரவு மீதமாகும் உணவுகளாஇ ஒரு பெட்டியில் கொட்டி மூடி வைப்பது இவர்களது வழக்கம்.

ஆனால் சமீப நாட்களாக அந்த பின்பக்கத்தில் வைக்கப் படும் அந்த உணவுப் பெட்டி காலையில், கார் பார்க்கிங் பகுதியில் உருண்டு கிடப்பதையும், அதிலுள்ள உணவுகள் மாயமாகி வருவதும் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவில் என்ன நடக்கிறது என்பதை அறிய ரகசிய கேமரா பொருத்தப்பட்டது.

மறுநாள் காலை ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளைப் போட்டுப் பார்த்த ஊழியர்கள் அதிர்ந்து விட்டனர். காரணம், இரவில் பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழையும் கரடி ஒன்று உணவுப் பெட்டியை சுமார் 15 அடி தூரம் நகர்த்திச் சென்று அதிலுள்ள கார, சார உணவுகளை ஒரு கை பார்ப்பது பதிவாகி இருந்தது.

காட்டிற்குள் இருந்து வரும் இக்கரடி, சுற்றுலாப்பயணிகள் அளித்த உணவின் மூலம் ஹோட்டல் உணவிற்கு அடிமையாகி இருக்கலாம் எனக் கூறப் படுகிறது. இப்போதெல்லாம், அக்கரடிக்குப் பயந்து உணவுத் தொட்டியை சங்கிலியால் கட்டிச் செல்கிறார்களாம் ஹோட்டல் ஊழியர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+