For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போரட்டத்தை தூண்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் வெள்ளை கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முருகானந்தம், இந்து மகா சபை நிறுவன தலைவர் ஸ்ரீஜி, மாநகர் மாவட்ட பொது செயலாளர் மணி உள்ளிட்டோர் நெல்லையப்பர் கோவிலுக்கு தேசிய கொடி, மற்றும் வெள்ளை கொடியுடன் பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கூடங்குளம் செல்ல முயன்றனர்.

ஆனால் போலீசால் அனுமதி கொடுக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து போலீசாருக்கும், இந்து மக்கள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர்கள் வெள்ளை கொடி ஏற்றுவதற்காக புறப்பட்டுக் கிளம்பினர். இதையடுத்து டக்களம்மாள்புரம் அருகே பெருமாள்புரம் போலீசார் அவர்களை மறித்து உடையார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

English summary
Police arrested 10 HMK cadres for attempting to enter into Kudankulam in support of KKNPP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X