For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உரிச்சா இல்ல, நினைச்சாலே கண்ணீரை வரவழைக்கும் வெங்காயத்தின் விலை!: கிலோ ரூ.80!!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை கடந்த 2 நாட்களில் சுமார் 100 சதவீதம் அதிகரித்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் வெங்காயத்தின் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 வரை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Onion prices at record high, hovering at Rs 80/Kg in Delhi

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் வெங்காய உற்பத்தி அதிகரித்தால் மண்டிகளுக்கு வெங்காய வரத்து அதிகரிக்கும். அதன் பிறகு வெங்காய விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ஆர்.பி. குப்தா கூறுகையில்,

வெங்காய உற்பத்தி குறையவில்லை. மேலும் குடோன்களில் போதிய அளவு இருப்பு உள்ளது. இந்நிலையில் வெங்காய விலை ஏன் அதிகரித்து வருகிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை குடோன்களில் இருந்து வர காலதாமதமாவதால் விலை அதிகரிக்கலாம் என்றார்.

English summary
Onion prices in Delhi have shot up by close to 100 percent in the last couple of days to Rs 80 per kg. Looking at the market trend, traders pointed that in the coming days retail onion prices could soar up to Rs 100 per kg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X