For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.என். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் நல்ல நிலையில்தான் இருந்ததே: ரஷ்யா

By Mathi
Google Oneindia Tamil News

INS Sindhurakshak
மாஸ்கோ: மும்பையில் தீ விபத்தில் சிக்கிய ஐ.என்.எஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் தங்களது நாட்டில் இருந்து ஜனவரி மாதம் திரும்பிய போது நல்ல நிலையிலேயே இருந்தது என்று ரஷிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரசிய தயாரிப்பான ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள பேட்டரிகளில் ஹைட்ரஜன் வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரசியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 80 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவால் செலவிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்குத் திரும்பி வந்தது. தற்போதும் ரசியாவின் 'வாரண்டி' இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் நேற்று சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 18 வீரர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆனால் ரசிய நிறுவனமோ ஜனவரி மாதம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட போது நீர்மூழ்கிக் கப்பல் நன்றாகத்தானே இருந்தது என்று கூறியுள்ளது. மேலும் எப்படி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தங்களுக்குத் தெரியவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
The Russian firm that had revamped INS Sindhurakshak, the submarine that sank in a Mumbai dock with 18 sailors on board following an explosion, said on Wednesday that the vessel was in a fit condition at the time of return to India in January this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X