For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற நரேந்திர மோடிக்கு அழைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi gets invite to visit Britain
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் 2 கட்சி எம்.பி.க்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும், நரேந்திர மோடிக்கு தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளன.

தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. பாரி கார்டினர், இதுதொடர்பாக மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் காமன்ஸ் அவையில் நவீன இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துமாறு மோடியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சைலேஷ் வாராவும், காமன்ஸ் அவையில் உரை நிகழ்த்த நரேந்திர மோடிக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்திற்கு பிறகு மோடியுடனான உறவுகளை அமெரிக்கா போன்று இங்கிலாந்தும் துண்டித்திருந்தது. இதுவரை அமெரிக்கா, மோடிக்கு விசா வழங்கவில்லை. ஆனால் திடீரென அமெரிக்க வெளியுறவுத் துறை திங்கள்கிழமையன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவின் பொதுத் தேர்தலில் யார் வென்றாலும் அவர்களுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற கடிதம் அனுப்பியுள்ளனர்.

English summary
Nearly 10 months after the British government warmed upto Narendra Modi, the India groups of the country's two main political parties have invited the Gujarat Chief Minister to visit the UK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X