For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மசோதாக்களுக்கு முட்டுக் கட்டை! நாடாளுமன்றத்தை முடக்குவது ஜனநாயக விரோதம்: ஜெயந்தி நடராஜன்

By Mathi
Google Oneindia Tamil News

Jayanthi slams opposition on Parliament adjourns
சென்னை: மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், நாடாளுமன்றத்தில் மக்களின் நலனுக்காக பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்குவது சரியானது அல்ல.

இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த போக்கை எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தூத்துக்குடி தாது மணல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, மாநில அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. தற்போது அக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

தாது மணல் முறைகேடுகளை தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் என்ற வேறுபாடு இல்லை. மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது.

விசாரணை நடத்தும் மாநில அரசின் குழுவின் அறிக்கையை கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசுடன் இணைந்து செயல்படும் என்றார்.

English summary
Union Minister Jayanathi Natarajan slams Opposition parties for parliament adjourns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X