ஏலே.. நான் நாய்ல... ‘ஆப்பிரிக்கச் சிங்கம்’ இல்லைலே.. நம்புங்கலே!
பெய்ஜிங்: சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஆப்பிரிக்க சிங்கம் என நடிக்க வைக்கப்பட்டிருந்த சடை நாய் ஒன்ரு குரைத்ததால் பார்வையாளார்களிடம் சிக்கியது.
ஒரு படத்தில் கவுண்டமணி, செந்திலிற்கு புலி போன்று வேடமிட்டு பார்வையாளார்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பார். பின்னர் ஒருநாள் வசமாக மாட்டிக் கொள்வார்கள் இருவரும். அதேபோன்ற வேடிக்கையான சம்பவம் ஒன்று சீனாவில் அரங்கேறியுள்ளது.
இதுவரை சிக்கம் என அஞ்சி பார்வையிட்டு வந்த பார்வையாளர்களுக்கு அது ‘லொள்..லொள்' என குரைத்து, நாய் எனத் தெரிய வந்தால் எவ்வளவு அதிர்ச்சியாயிருக்கும்...

இது தான் ஆப்பிரிக்கச் சிங்கம்...
சீனாவில் உள்ள லூஹி மிருகக்காட்சி சாலையில் அதிக முடியுள்ள சடை நாயை ‘ஆப்பிரிக்க சிங்கம்' என இதுநாள் வரை ஏமாற்றி வந்துள்ளனர்.

விநோத ஓசைகள்...
தனது சிறிய மகனுக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் விநோத ஓசைகளை அறிமுகப் படுத்துவதற்காக அந்த மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து வந்தார் லியூ என்பவர்.

குரைக்கும் சிக்கம்...
அப்போது ஆப்பிரிக்கச் சிங்கம் என எழுதப் பட்டிருந்த கூண்டிற்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து விட்டார் லியூ.

சடை நாய்...
பின்னர் விசாரணையில் அது நீண்ட சடை முடியை உடைய நாய் தான் அது என்பது தெரிய வந்தது. மேலும் இத்தனை நாட்களாக அந்த நாயை காட்டி பார்வையாளார்களை மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் ஏமாற்றி வந்தது உறுதியானது.

சிறுத்தையாக நடித்த வெள்ளைநரி...
போலீசாரின் அதிரடி விசாரணையில் இதேபோன்று, வெள்ளை நரி ஒன்று சிறுத்தையின் கூண்டிலும், மற்றொரு நாய் ஒன்று நரியின் கூண்டிலும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது

காசு கொடுத்து ஏமாந்தவர்கள்...
விலங்குகளை காட்ட டிக்கெட் வசூலித்து விட்டு இவ்வாறு போலியான பெயரில் விலங்குகளைக் காட்டி ஏமாற்றியதால் பொதுமக்கள் கோபமடைந்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications