For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முலாயமா இப்படிச் சொன்னார்.. நம்ப முடியலையே....??

Google Oneindia Tamil News

Mulayam Singh Yadav to mediate with Muslims on Ram temple, Vishwa Hindu
லக்னோ: ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக முஸ்லீம் தலைவர்களுடன் தான் பேசுவதாகவும் சமரசம் செய்து வைப்பதாகவும் தங்களிடம் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்யாதவ் உறுதியளித்துள்ளதாக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் முலாயம் சிங் யாதவ் அப்படி எந்தத் தகவலையும் அவரது வாயால் வெளியிடவில்லை. எனவே இந்து மதத் தலைவர்கள் சொல்வது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், மடாதிபதிகள் அடங்கிய குழுவினர் முலாயமைப் பார்த்துப் பேசி விட்டு வெளியே வந்தபோது இப்படிக் கூறினார்கள்.

சிங்கால் தலைமையில்

விஸ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் அசோக் சிங்கால் தலைமையில் இந்தக் குழுவினர் முலாயமைச் சந்தித்துப் பேசினர். பின்னர் சிங்கால் செய்தியாளர்களிடம் பேசுகையில், முலாயமையும், அவரது மகனும், உபி முதல்வருமான அபிஷேக் யாதவையும் சந்தித்துப் பேசினோம். அவர் முஸ்லீம் தலைவர்களிடம் பேசுவதாக கூறியுள்ளார் என்றார்.

சுவாமி சின்மயானந்த்

பாஜகைவச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சுவாமி சின்மயானந்த் கூறுகையில், பல காலமாக ராமர் கோவில் வழக்கு இழுக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார் முலாயம் சிங். பேச்சுவார்த்தை மூலமே இது தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ராமர் கோவில் கட்டக் கோரி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனி நபர் மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்று அவரை நாங்கள் கேட்டுக் கொண்டோம் என்றார்.

பாலமாக செயல்படுங்கள்

தூதுக் குழுவினர் மேலும் கூறுகையில், இந்த விவகாரத்தில் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே பாலம் போல முலாயம் சிங் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனராம். இந்தக் கோரிக்கையை முலாயம் சிங் ஏற்றுக் கொண்டார். முஸ்லீம் தலைவர்களுடன் பேசுவதாகவும் அவர் உறுதியளித்தார் என்றார் சின்மயானந்த்.

English summary
A delegation comprising seers and leaders of Vishwa Hindu Parishad and Bharatiya Janata Party met Samajwadi Party chief Mulayam Singh Yadav on Saturday and claimed he has agreed to talk to Muslim leaders, clerics and ulemas to find a way for construction of the Ram temple in Ayodhya
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X