For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபேஸ்புக்கின் குட்டை உடைத்த பாலஸ்தீனியருக்கு பரிசளிக்கும் ஹேக்கர்கள்

By Siva
Google Oneindia Tamil News

Hacker who exposed Facebook bug to get reward from fellow hackers
நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் பக்கத்தை ஹேக் செய்தவருக்கு சக ஹேக்கர்கள் பரிசளிக்கவிருக்கின்றனர்.

ஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு பிரச்சனை அதாவது பக் குறித்து அந்நிறுவனத்திடம் பாலஸ்தீனியரான கலீல் ஷ்ரியதே புகார் கொடுத்தார். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளாததால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் பக்கத்தை ஹேக் செய்து அவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த பக் சரி செய்யப்பட்டது.

வழக்கமாக இது போன்ற பக் குறித்து தெரிவித்தால் தெரிவிப்போருக்கு பரிசு வழங்கப்படும். ஆனால் கலீலுக்கு பரிசு வழங்கவில்லை. மாறாக அவரது ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.

இதையடுத்து உலக ஹேக்கர்கள் அவருக்கு பரிசளிக்க முன் வந்துள்ளனர். இந்நிலையில் பியான்ட் ட்ரஸ்ட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மார்க் மெய்பிரட் ஹேக்கர்களிடம் இருந்து ரூ. 642,957 நிதி திரட்ட வழிவகை செய்துள்ளார்.

கலீலுக்கு ஃபேஸ்புக் பரிசு அளிக்காதது நியாயமில்லை என்று மெய்பிரட் மற்றும் பல ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். கலீல் பாலஸ்தீனத்தில் உட்கார்ந்து 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு லேப்டாப்பில் ஆய்வு செய்கிறார். அநத் லேப்டாப்பை பார்த்தால் அது ஏற்கனவே பாதி உடைந்தது போல் இருக்கிறது என்று மெய்பிரட் தெரிவித்தார்.

English summary
When Facebook didn't reward Palestinian researcher Khalil for reporting a bug, fellow hackers have come forwarded to reward him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X