For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாரிங்க...உங்க பரிசை வைக்க ‘அரண்மணை’ல இடமேயில்ல...: இப்படிக்கு வில்லியம்-கேட்

Google Oneindia Tamil News

லண்டன்: கர்ப்பமான காலம் தொட்டு, குட்டி இளவரசன் ஜார்ஜ் பிறந்த பிறகும் வந்து குவியும் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளால் திணறிப் போயுள்ளார்களாம் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்.

வந்து குவியும் பரிசுகளை என்ன செய்வது எனத் தெரியாமல் அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பத் திட்டமிட்டுள்ளார்களாம். இதற்கென தனி ஆபிசர்களை நியமித்துள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

குட்டி இளவரசர்....

குட்டி இளவரசர்....

கடந்த மாதம் 22ம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியினருக்கு பிறந்த அழகிய ஆண் குழந்தைக்கு ஜார்ஜ் எனப் பெயரிடப்பட்டது.

பரிசுகளால் திக்குமுக்காட....

பரிசுகளால் திக்குமுக்காட....

உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அக்குழந்தைக்கு உலகமக்கள் தங்களால் இயன்ற பரிசுகளை, கேட் கர்ப்பமான நாள் தொட்டு, இன்று வரை அனுப்பி வருகின்றனர்.

குழப்பமா இருக்கே...

குழப்பமா இருக்கே...

உலக மக்கள் தங்கள் மீது கொண்டுள்ள பாசத்தையும், அக்கறையையும் கண்டு சிலிர்த்துப் போயுள்ள கேட்- வில்லியம் தம்பதிகள், அதேசமயம் இத்தனைப் பரிசுப் பொருட்களை எங்கே வைப்பது என்ற குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நன்றி... நன்றி...நன்றி...

நன்றி... நன்றி...நன்றி...

ஒருவழியாக, ‘உங்களது அன்புக்கும், பரிசுக்கும் நன்றி' என்ற அறிவிப்புடன் பரிசுப் பொருட்களை அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கி விட்டார்களாம் இந்த அரசத் தம்பதிகள்.

புதிய வேலைவாய்ப்பு....

புதிய வேலைவாய்ப்பு....

இந்த வேலைகளைப் பொறுப்புடன் செய்வதற்காகவே தனி செக்‌ஷனையும், பணியாளர்களையும் நியமித்துள்ளார்களாம். அவர்களின் பணி நன்றிக் கடிதத்துடன் சம்பந்தப் பட்டவர்களுக்கு பரிசுப் பொருட்களைத் திருப்பி அனுப்புவதே ஆகும்.

பரிசுகள் பலவிதம்...

பரிசுகள் பலவிதம்...

வந்து குவிந்துள்ள பரிசுகளில் வகைவகையான துணிமணிகள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பரிசுகள் ஒருபக்கமும், மற்றொரு பக்கம் உலக நாடுகளில் உள்ள பிரபல சுற்றுலா சொகுசு விடுதிகளில் தங்குவதற்கான அழைப்புகள் போன்றவை அடக்கம்.

எங்க கார் அனுப்பவா...

எங்க கார் அனுப்பவா...

அதுபோக, ரோல்ஸ் ராய்ஸ், ஆடி போன்ற பிரபல கார் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை அனுப்புவதாக அறிவித்துள்ள அன்புத் தொல்லைகளும் உண்டாம்.

தபால் செலவு அதிகமானால்...

தபால் செலவு அதிகமானால்...

திருப்பி அனுப்புவதற்கான தபால் கட்டணம் அதிகமாகும் பட்சத்தில் அந்த பரிசுப் பொருட்கள் இங்கிலாந்தில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

தேங்க்யூ.... சோ மச்....

தேங்க்யூ.... சோ மச்....

பரிசுப் பொருட்கள் தவிர, குட்டி இளவரசர் ஜார்ஜ் பிறந்ததற்கு வாழ்த்து செய்திகளை அனுப்பிய அன்பர்களுக்கும் வில்லியம்-கேட் தம்பதியர் நன்றி தெரிவித்து கடிதங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாமெல்லாம் வில்லேஜ் விஞ்ஞானி பாஸூ.....

நாமெல்லாம் வில்லேஜ் விஞ்ஞானி பாஸூ.....

இப்படியெல்லாம் பின்னாடி கெடந்து யோசிக்கணும்னு தான் நம்மாளுங்க இன்விடேஷன்லயே, பரிசுப் பொருள் வேணாங்க... மொய்யா செங்சுடுங்க'னு போட்டுடறாங்க போல.....

English summary
The Duke and Duchess of Cambridge were reportedly offered prams, cars and even holidays but declined to accept them, as they did not want to be seen as freeloaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X