For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய எண்ணெய் கப்பல்! 1 மில்லியன் டாலர் ஜாமீன் தொகை கோருகிறது!

By Mathi
Google Oneindia Tamil News

Iran seeks $1 million guarantee money to release tanker
டெஹ்ரான்: ஈரானில் இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் கடந்த 15 நாட்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் ஜாமீன் தொகை கோருகிறது ஈரான்.

ஈராக்கின் பஸ்ராவில் கச்சாஎண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது இந்திய அரசுக்கு சொந்தமானது எம்.டி. தேஷ் சாந்தி எண்ணெய் கப்பல். இந்தக் கப்பலை ஈரான் கடற்பரப்பில் வழிமறித்த அந்நாட்டு கடற்படை பந்தார் அப்பாஸ் துறைமுகத்துக்கு கொண்டு சென்று சிறை பிடித்து வைத்திருக்கிறது.

இது இந்திய அரசுக்கு பேரிடியாக விழுந்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா மேற்கொண்டு வரக் கூடிய நட்புநாடு. ஆனால் ஈரானே, இந்தியாவின் எண்ணெய் கப்பலை இடைமறித்து நிறுத்தியது ஏன் என்ற குழப்பம் இந்திய அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த ஈரான், தங்களது நாட்டு கடற்பரப்பில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்த காரணத்தாலேயே இந்திய எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனில் 1 மில்லியன் டாலர் உத்திரவாத தொகை அளிக்கவும் ஈரான் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈராக் - இந்திய நட்புறவுக்கு பதிலடி

ஈரான் மீதான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடையைத் தொடர்ந்து அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டு ஈராக்கிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை செய்து வருகிறது. மேலும் ஈராக் பிரதமர் இந்தியாவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்த போதுதான் ஈராக்கில் இருந்து வந்த இந்திய எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

ஈராக்- இந்தியாவுடனான நெருக்கமான உறவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்கின்றன அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Iran’s decision to detain an oil tanker owned by state-run Shipping Corp. of India Ltd since 13 August, allegedly for causing pollution in its waters, has created ripples in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X