காற்று குறைந்தது.. மின் உற்பத்தி இறங்கியது.. மீண்டும் பல இடங்களில் 'பவர் கட்'!
சென்னை: கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட 24 மணி நேரமும் மின்சார விநியோகம் என்று இருந்த சந்தோஷ நிலை மாறி - சென்னை தவிர - தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கொடுமையான மின்வெட்டிலிருந்து தப்பி சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த மக்கள் இந்த மின்வெட்டால் மறுபடியும் சோர்வடையத் தொடங்கியுள்ளனர்.
காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால்தான் இந்த மின்வெட்டு என்று கூறப்படுகிறது.

பல மணி நேர மின்வெட்டில் சிக்கித் தவித்த தமிழகம்
சில மாதங்களுக்கு முன்பு வரை பல மணி நேர மின்வெட்டில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தது தமிழகம்.

ஷிப்ட் முறையில் வெட்டு
ஷிப்ட் முறையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் அதிகபட்சம் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.

மழையும் - காற்றும்
இந்த நிலையில், தென் மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. மேலும் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் மின்வெட்டு கிட்டத்தட்ட முழுமையாக நீங்கியது.

எங்கு பார்த்தாலும் கரண்ட்...
கார்ட்டூன் போட்டுக் கிண்டலடிக்கும் வகையில் இருந்த தமிழக மின் நிலை அப்படியே முழுமையாக மாறியது. மின்வெட்டு என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு மின்வெட்டு முழுமையாக அகன்றது.

24 மணி நேர மின்சாரம்
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அறவே நீங்கியது அல்லது மின்வெட்டு மிக மிக குறைவாக இருந்தது.

காற்று நின்றது
இந்த நிலையில் தற்போது காற்றாலை மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 3,200 மெகாவாட்டாக இருந்த மின்உற்பத்தி, நேற்று காலை நிலவரப்படி 360 மெகாவாட்டாக குறைந்தது.

மத்திய மின்சாரமும் குறைந்தது
அதேபோல, மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தின் அளவும் கணிசமாக குறைந்தது. இதனால் தமிழகத்தின் மொத்த மின்தேவையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1650 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவியது.

மறுபடியும் முதல்ல இருந்தா...
இந்த மின்வெட்டு மக்களிடையே மறுபடியும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஷிப்ட் போட்டு கரண்டடை கட் செய்யப் போகிறார்களோ என்ற அச்சமும் அவர்களிடையே எழுந்துள்ளது.
அதற்குள் லோக்சபா தேர்தல் வந்து விட்டால் நல்லாருக்கும்...!!
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications