For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்மேற்கு பருவமழை 11% கூடுதல்... வானிலை ஆய்வு மையம் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் தென் மேற்கு பருவ மழையால் 11 சதவீதம் கூடுதல் மழைப் பொழிவு கிடைத்துள்ளதாம்.

வானிலை ஆய்வு மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு நல்ல மழைப் பொழிவை நாடு சந்தித்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

தற்போது தென் மேற்குப் பருவமழைக் காலம். இது இன்னும் முடியவில்லை. தொடர்ந்து பல பகுதிகளில் மழை நிலவி வருகிறது.

தமிழகத்தில் நல்ல பலன்

தமிழகத்தில் நல்ல பலன்

தென்மேற்கு பருவமழையால் கேரளா, கர்நாடகா, மும்பை, மேற்குவங்காளம், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் பயனடைந்து வருகிறது.

தீவிரமடைந்துள்ளது

தீவிரமடைந்துள்ளது

மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

வழக்ககத்தை விட கூடுதலாக 11 சதவீதம்

வழக்ககத்தை விட கூடுதலாக 11 சதவீதம்

மேலும்,நாடு முழுவதும் வழக்கத்தை விட 11 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆக. 30 வரை 781.3 மி.மீ

ஆக. 30 வரை 781.3 மி.மீ

கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 30-ந்தேதி வரை 781.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 706.7. மி.மீ. மழைதான் பெய்யும். இந்த ஆண்டு கூடுதலாக 74.6 மி.மீ. மழை பெய்துள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் குறைவு

வட கிழக்கு மாநிலங்களில் குறைவு

அதே நேரத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 29 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது.

வடமேற்கில் அதிகம்

வடமேற்கில் அதிகம்

வடமேற்கு பகுதியில் 21 சதவீதம், மத்திய பகுதியில் 29 சதவீதம், தென் பகுதியில் 16 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.

87 சதவீத பகுதிகளில் அதிகம்

87 சதவீத பகுதிகளில் அதிகம்

நாட்டில் 87 சதவீத பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதலாகவே மழை பெய்துள்ளது. 13 சதவீத பகுதிகள் தொடர்ந்து மழை பற்றாக்குறைவான பகுதியாக உள்ளது. இதில் பெருவாரியான பகுதிகள் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடங்கி உள்ளன.

English summary
Most of the country has recieved 11% surplus rain this year during the south west monsoon period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X