• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்ணுடன் தனிமையில் இருந்தேன்.. பேத்தியுடன் தாத்தா இருப்பது மாதிரி.. இது ஆசாராமின் பேச்சு!

By Chakra
|

Asaram agrees spending time with girl but denies committing rape
ஜோத்பூர்: கற்பழிப்பு புகாரில் சிக்கியுள்ள சாமியார் ஆசாராம் பாபு, அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் அவரிடம் பாலியல் அத்துமீறல் ஏதும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்தூரில் கைது செய்யப்பட்டு நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

வட மாநிலங்களில் பிரபலமான ஆசாராம் பாபு (72) மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். அதில் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த, 16 வயது சிறுமி, ஆசாராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து நீண்ட கண்ணாமூச்சி ஆட்டத்துக்குப் பின் ஆசாராம் கைது செய்யப்பட்டார்.

இப்போது விசாரணையில் இருந்து வரும் ஆசாராமுக்கு ஆண்மை சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் முழு ஆண்மையுடன் இருப்பதும், பலாத்காரம் செய்யும் நிலையில் அவரது உடல் நிலை இருப்பதும் உறுதியானது.

இதையடுத்து போலீசார் அவரை கிண்டி எடுத்து வருகின்றனர். முதலில் எல்லாவற்றையும் மறுத்த ஆசாராம், பின்னர் அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை ஒப்புக் கொண்டார். ஆனால், தவறு ஏதும் செய்யவில்லை என்றார்.

மேலும் தாத்தாக்கள் தங்களது பேத்திகளுடன் நேரம் செலவிடுவது சகஜம் தானே என்று கூறியுள்ளார் திமிர் பிடித்த ஆசாராம். நான் அந்தப் பெண்ணுடன் பலமுறை தனியாக நேரம் செலவிட்டு, நிறைய பேசுவது வழக்கம் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக தான் யாரையும் பலாத்காரம் செய்யும் அளவுக்கு ஆண்மையுடன் இல்லை என்று ஆசாராம் கூறியிருந்தார். ஆனால், அவரை பரிசோதித்த 3 டாக்டர்கள் குழு, மருந்து ஏதும் சாப்பிடாமலேயே ஆசாராமால் பாலியல் புணர்ச்சியில் ஈடுபட முடியும் அளவுக்கு அவரது உடல் நிலை திடமாகவே உள்ளதாகக் கூறிவிட்டனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணுடன் நேரம் செலவழித்தேன், ஆனால், ஏதும் செய்யவில்லை என்று அடுத்த பல்டி அடித்துள்ளார் ஆசாராம்.

உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை:

இந் நிலையில் ஆசாராம் பாபுவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரெய்லியில்காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

ஆதரவாளர்கள் போராட்டம்-போலீசார் 'காட்டடி'!:

இந் நிலையில் ஜோத்பூர் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ஆசாராமை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சாமியார் அசராம் பாபு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து ஜோத்பூர் சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் போராட்டக்காரர்களை மிகக் கடுமையான தடியடி நடத்தி விரட்டினர்.

அடி பொறுக்க முடியாமல் அந்தக் கூட்டம் நிமிடத்தில் கலைந்து ஓடிவிட்டது.

காதலர் தினம் குறித்து ஆசாராம் சொன்னது இது:

கடந்த ஆண்டு இந்த ஆசாராம் விடுத்த ஒரு கோரிக்கை இது... அதை நினைவுகூர்ந்து பார்ப்பது முக்கியம். அவர் கூறியது இது தான்.

''காதலர் தினத்தை தாய் தந்தையரை பூஜிக்கும் தினம்' ஆக அறிவிக்க வேண்டும். இளைஞர்கள் மேற்கத்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு நெறிதவறிப் போய், பெண்கள் வன்கொடுமை போன்ற துன்பங்களுக்கு ஆளாவது தடுக்கப்பட வேண்டும் என்றால், காதலர் தினம் போன்ற மேற்கத்திய கலாசார கொண்டாட்டங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்''

இது எப்டி இருக்கு!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
As he runs out of excuses, more trouble seems to be mounting on Asaram Bapu, who defended himself and said that 'nothing is wrong if a grandfather spends some time with his granddaughter.' Asaram, who is currently in Jodhpur police's custody, remained defiant about the rape charges but agreed on Tuesday, to have spent some time alone with the 16-year-old girl, who has accused him of raping her. He said that, 'There is nothing wrong if a grandfather spends time with his grand-daughter' and that he had a very 'loving' conversation with her.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more