For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானக் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தியது ஸ்பைஸ்ஜெட்... ஜெட், ஏர் இந்தியாவும் உயர்த்துகின்றன

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது விமான பயணக் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா நிறுவனங்களும் தங்களது பயணிகள் கட்டணத்தை உயர்த்தவுள்ளன.

ஜெட் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து இந்த கட்டண உயர்வை விமான நிறுவனங்கள் அறிவிக்க ஆரம்பித்துள்ளன.

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முதல் ஆளாக கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஸ்பாட் மற்றும் அட்வான்ஸ் புக்கிங்குக்கான கட்டணத்தை ஸ்பைஸ்ஜெட் தற்போது உயர்த்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் உயர்வு

செவ்வாய்க்கிழமை முதல் உயர்வு

செவ்வாய்க்கிழமை மாலை முதல் தனது கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்.

டெல்லி - மும்பைக்கு ரூ. 10,000 தரணும்

டெல்லி - மும்பைக்கு ரூ. 10,000 தரணும்

கட்டண உயர்வைத் தொடர்ந்து டெல்லி - மும்பை பயணத்திற்கான கட்டணம் ரூ. 6000-7000 என்பதிலிருந்து ரூ. 10,000 ஆக அதிகரித்துள்ளது.

ஜெட்டும் ஏற்றுகிறது

ஜெட்டும் ஏற்றுகிறது

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் விரைவில் தனது கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏர் இந்தியாவும்

ஏர் இந்தியாவும்

இதேபோல ஏர் இந்தியா நிறுவனமும் தனது கட்டண உயர்வு குறித்து இன்று அறிவிக்கவுள்ளதாம்.

மற்றவர்களும் உயர்த்தலாம்

மற்றவர்களும் உயர்த்தலாம்

இதேபோல பிற விமான நிறுவனங்களும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலை 7 சதவீதம் உயர்வு

எரிபொருள் விலை 7 சதவீதம் உயர்வு

விமானங்களுக்கான ஜெட் எரிபொருளின் விலை கடந்த வார இறுதியில் 7 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதையடுத்தே தற்போது பயணிகள் கட்டணத்தில் அவை கை வைக்க ஆரம்பித்துள்ளன.

English summary
Airlines have started raising air fares by anywhere up to 30% with immediate effect following the massive increase in price of jet fuel, which is now at an all-time high. Low-cost carrier (LCC) SpiceJet raised both spot and advance purchase fares from Tuesday evening by over 25%. Jet Airways said it was planning a hike shortly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X