For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி ராஜினாமா செய்யக் கோரி குஜராத் பந்த்.. காங். அழைப்பு

Google Oneindia Tamil News

Congress calls for bandh in Gujarat, demands CM's resignation
அகமதாபாத்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி வன்சாராவின் கடிதத்திற்குப் பொறுப்பற்று முதல்வர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பந்த் நடத்த குஜராத் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இன்று இந்த பந்த் நடக்கிறது. இருப்பினும் பந்த்திற்கு ஆதரவு கிடைத்திருப்பதாக தெரியவில்லை.

வன்சாரா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா நேற்று கூறுகையில், இந்த அரசு ஒரு நாள் கூட பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. மக்களையும், வியாபாரிகளையும் பந்த்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அரசு மிரட்டி வருகிறது. இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு மக்கள் பங்களிப்பைத் தடுக்கப் பார்க்கிறது.

வெள்ளிக்கிழமை மகாவீர் ஜெயந்தியாகும். எனவே இந்த அரசு எடுக்கும் வன்முறைத் தனமான முடிவுகளை எதிர்க்க நாங்கள் அமைதி வழியைக் கையாளுவோம். அகிம்சை வழியில் இந்த அரசை எதிர்த்துப் போராடுவோ்ம் என்றார்.

English summary
Gujarat has recently witnessed a lot of unrest over the suspended IPS officer Vanzara's letter and the revelations made by him in the same. Keeping this in mind, the Congress party has called for a state wide bandh on Friday. The party has also demanded Chief Minister Narendra Modi's resignation, over the allegations made by Vanzara in his letter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X