For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அமைச்சரவை: மியூசிக்கல் சேர் ஆடும் அமைச்சர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ஆடுபுலியாட்டம் போல வெட்டப்படுவதும்... எம்.எல்.ஏவாக இருந்தவர்கள் எதிர்பாராமல் சைரன் சுழல அமைச்சராக காரில் வலம் வருவதும் சகஜமாகிவிட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாடு சென்று திரும்பியதிலிருந்தே, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. அமைச்சரவை மாற்ற ஹிட் லிஸ்ட்டில் நாமும் இடம்பெற்றிருக்கிறோமோ என்ற அச்சத்திலேயே பெரும்பாலான அமைச்சர்கள் 'திக்... திக்' என நாட்களை கடத்திவந்தனர்.

தலை தப்பிய பணிவு

தலை தப்பிய பணிவு

மூத்த பணிவு அமைச்சர் உள்பட குறிப்பிட்ட 4 அமைச்சர்கள் மீது ஜெயலலிதா கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரது தலை தப்பிவிட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

34 அமைச்சர்கள்

34 அமைச்சர்கள்

தமிழகத்தில் 2011ம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மே 16ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உள்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அன்று முதல் இன்று வரை 10 முறை தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை முகமது ஜான்

ராணிப்பேட்டை முகமது ஜான்

முதன் முறையாக 29.6.2011 அன்று தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்எல்ஏ முகமதுஜான் நியமிக்கப்பட்டார். அன்றைய தினம் 6 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டது.

சட்ட அமைச்சர் பதவி

சட்ட அமைச்சர் பதவி

2வது முறையாக 2011ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ செந்தூர் பாண்டியன் நியமிக்கப்பட்டார். அன்றைய தினம் இரண்டு அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டது.

6 பேர் அதிரடி நீக்கம்

6 பேர் அதிரடி நீக்கம்

2011ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி அமைச்சர்கள் செந்தமிழன், சண்முகவேலு, புத்திசந்திரன், சண்முகநாதன், உதயகுமார், சிவபதி ஆகிய 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்களாக தாமோதரன், பரஞ்ஜோதி, மூர்த்தி, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, சுந்தர்ராஜன் உள்ளிட்ட 6 பேர் நியமிக்கப்பட்டனர்.

பரஞ்சோதி ராஜினாமா

பரஞ்சோதி ராஜினாமா

2011ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சட்டம் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி ராஜினாமா செய்தார். அன்றைய தினம் சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 12ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவுட்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவுட்

2012ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வருவாய்த்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக என்.ஆர்.சிவபதி, சுப்பிரமணியன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

செங்கோட்டையனுக்கு செக்

செங்கோட்டையனுக்கு செக்

2012ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி தமிழக அமைச்சரவையில் இருந்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார்.

சி.வி.சண்முகம் நீக்கம்

சி.வி.சண்முகம் நீக்கம்

2012ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி வணிகவரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக பி.மோகன் நியமிக்கப்பட்டார். அன்றைய தினம் 4 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டது.

3பேர் அவுட் 3 பேர் இன்

3பேர் அவுட் 3 பேர் இன்

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் விஜய் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். புதிய அமைச்சர்களாக வைகைச்செல்வன், டி.பி.பூனாட்சி, கே.சி.வீரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அமைச்சர் செந்தூர் பாண்டியனின் இலாகாவும் மாற்றப்பட்டது.

முகமது ஜான் நீக்கம்

முகமது ஜான் நீக்கம்

கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எஸ்.டி.செல்லப்பாண்டியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.முகமதுஜான் ஆகிய 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்களாக எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அன்றைய தினம் 3 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது.

வைகைச் செல்வன்

வைகைச் செல்வன்

தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் அமைச் சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

உருண்ட தலைகள்

உருண்ட தலைகள்

இசக்கி சுப்பையா, செந்தமிழன், சண்முகவேலு, புத்தி சந்திரன், சண்முகநாதன் (நீக்கப்பட்டு மீண்டும் அமைச்சர்), உதயகுமார் என்.ஆர்.சிவபதி, பரஞ்ஜோதி (ராஜினாமா), செல்வி ராமஜெயம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், (சபாநாயகர்), சி.வி.சண்முகம், கோகுலஇந்திரா, என்.ஆர்.சிவபதி (2வது முறையாக மாற்றம்), வி.எஸ்.விஜய், செல்லப்பாண்டியன், முகமதுஜான் வைகைச்செல்வன் இவர்களைத் தவிர மரியம்பிச்சை மற்றும் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களாக இருக்கும்போது இறந்துள்ளனர்.

English summary
The ministers of Jayalalitha govt have become the members of musical chair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X