இந்தோனேசியாவில் தொடங்கியது கவர்ச்சிக் குறைவான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி

Subscribe to Oneindia Tamil

பாலி: இந்தோனேசியாவின் பாலி தீவில் 2013ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி தொடங்கியது.

முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு எதிரொலியாக தொடக்க விழாவில், கலந்து கொண்ட அனைத்து நாட்டு அழகிகளும் இந்தோனேசியாவின் பாரம்பரிய உடையில் அணிவகுத்து வந்தனர் - கவர்ச்சி அதிகம் தெரியாத வகையில்.

மேலும் இந்த ஆண்டுப் போட்டியில் பிகினி உடைக்கும் குட்பை சொல்லியுள்ளனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.

ஜகார்த்தாவில் முதலில்

ஜகார்த்தாவில் முதலில்

முன்னதாக இந்த அழகிப் போட்டியை ஜகார்த்தா அருகே நடத்துவதாக இருந்தனர். ஆனால் ஆபாசமான இந்தப் போட்டியை இங்கு நடத்தக் கூடாது என்று முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாலிக்கு மாற்றம்

பாலிக்கு மாற்றம்

இதையடுத்து இந்து சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பாலி தீவுக்கு போட்டியை மாற்றி விட்டனர் அமைப்பாளர்கள்.

கண்கவர் தொடக்க விழா

கண்கவர் தொடக்க விழா

போட்டியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை பாலி தீவில் நடந்தது. இதில் கண்கவர் அழகிகள் அணிவகுத்தனர். ஆனால் கவர்ச்சி மிகவும் குறைவாகஇருந்தது.

இந்தோனேசிய உடையில்

இந்தோனேசிய உடையில்

அனைத்து அழகிகளும் இந்தோனேசியாவின் பாரம்பரிய உடையைத் தேர்வு செய்திருந்தனர்.

பாலி நடனமும்

பாலி நடனமும்

மேலும் பாலி தீவின் பாரம்பரிய நடனத்தையும் அழகிகள் ஆடிக் காட்டியது இந்தோனேசிய மக்களுக்கு வைக்கப்பட்ட மாபெரும் ஐஸாக அமைந்தது.

மாலையில் கேட்வாக்

மாலையில் கேட்வாக்

தொடக்க விழாவைத் தொடர்ந்து அன்று மாலை கேட்வாக் நிகழ்ச்சி நடந்தது. அதில் அதற்குகரிய உடையில் அழகிகள் கலக்கினர்.

இசை - நடனம்

இசை - நடனம்

இந்தோனேசிய கலைஞர்களின் இசை நடனத்துடன் கூடியதாக தொடக்க விழா இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+