எதுவுமே சரியில்ல.. நான் வந்தால் அனைத்தையும் முடித்து விட்டு செல்வேன்! அரியலூரில் அன்புமணி பேச்சு!
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் சோழர் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி, எழுச்சி நடை பயணத்தின் இரண்டாவது நாள் பிரச்சாரத்தினை, அரியலூர் நகர பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி தொடங்கிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் சோழர் நீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காலை தன்னுடைய நடை பயணத்தை அவர் தொடங்கினார்.
இன்று 2ஆம் நாளாக அரியலூரில் நடைபயணத்தை தொடங்கிய அவர், அரியலூர், வாலாஜாநகரம், அஸ்தினாபுரம், வி.கைகாட்டி, தத்தனூர், உடையார்பாளையம், கச்சிபெருமாள், துலாரங்குறிச்சி ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

அன்புமணி ராமதாஸ்
தொடர்ந்து ஜெயங்கொண்டம், ஆமநத்தம் தோண்டி, கங்கைகொண்டசோழபுரம், மீன்சுருட்டி, கண்டமங்கலம் வழியாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் வழிநெடுகிலும் பாமகவினர், பொதுமக்கள் அன்புமணியை உற்சாகமாக வரவேற்றனர்.

2வது நாள் நடைபயணம்
தனது நடைபயணத்தின் போது பெண்கள், மாணவர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சோழகங்கம் என்னும் பொன்னேரியை பார்வையிடும் அன்புமணி ராமதாஸ் அங்கு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

முக்கிய திட்டம்
தொடர்ந்து காட்டுமன்னார்குடியில் உள்ள வீராணம் ஏரியை பார்வையிடுகிறார். அத்துடன் இரண்டு நாள் பயணத்தை அவர் நிறைவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

நான் வந்தால்..
நடைபயணத்தின் போது மக்களிடையே பேசிய அன்புமணி," சோழர் பாசன திட்டத்தை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும், பொன்னேரியில் இருந்தும், பொன்னாற்றில் இருந்தும் நீர் வரும். ஒவ்வொரு ஆறுகளும் நீரினால் நிரம்பியிருக்க வேண்டும். அதற்கு ஏரிகளை தூர்வாரியிருக்க வேண்டும். அவ்வாறு தூர்வாரியிருந்தால் அரியலூர் மாவட்டம் வளம் பெற்று, பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கும். கரைவெட்டி சரணாலயம் சுற்றுலாத்தலமாக மாறும். நான் வந்தால் அனைத்தையும் முடித்துவிட்டு செல்வேன் " என பேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications