பாஜகவுக்கே “பூமராங்”.. கர்நாடக காங்கிரசின் “ஆபரேஷன்”! தாவும் 500 தாமரைகள் - அண்ணாமலைக்கும் “டென்சன்”
கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த 500 பேர் காங்கிரஸ் கட்சிக்கு தாவ இருப்பதாக வெளியான தகவலால் அக்கட்சித் தலைமை அதிர்ச்சியடைந்து உள்ளது.
பெங்களூரு: இன்னும் ஒன்றரை மாதங்களில் சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கில் இருக்கும் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த 500 பேர் காங்கிரஸ் கட்சிக்கு தாவ இருப்பதாக வெளியான தகவலால் அக்கட்சித் தலைமை அதிர்ச்சியடைந்து உள்ளது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. எனவே ஒன்றரை மாதங்களில் கர்நாடகாவி; சட்டசபை தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. மறுபக்கம் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன.

பாஜகவுக்கு சிக்கல்
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அம்மாநிலத்தில் ஏற்பட்ட ஹிஜாப், ஹலால் பிரச்சனைகள், அதனால் வெடித்த மத கலவரங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், வேலையிழப்புகள், பெங்களூரு வெள்ளம், லிங்காயத்துக்கு மக்களின் எதிர்ப்பு, பாஜக உட்கட்சி பூசல் போன்றவற்றால் இந்த தேர்தல் அக்கட்சிக்கு கடினமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

போராடும் பாஜக
எனவே கர்நாடக மாநில எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகளை வைத்து மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையிலும், கர்நாடக மாநில பாஜக அரசின் பணிகளை எடுத்துரைத்து தொகுதி வாரியாக அக்கட்சி பொதுகூட்டங்களை நடத்தி தாமரைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் பரப்புரை செய்து வருகிறது.

வெறுப்பு பேச்சுக்கள்
இருப்பினும் அந்த பொதுக்கூட்டங்களில் பாஜக தலைவர்கள் பேசும் சர்ச்சைக்குரிய மத வெறுப்பு கருத்துக்களின் காரணமாக கர்நாடகாவில் அந்த கட்சி மீதான இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித்திகள் மற்றும் லிங்காயத்து சமூகத்தினரின் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மறுபக்கம் காங்கிரஸ் புத்துணர்ச்சியுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது.

பாஜகவின் யுக்தி
இந்த நிலையில், பல மாநிலங்களில் பாஜக மேற்கொண்ட யுக்தியை அக்கட்சிக்கு எதிராகவே கர்நாடகாவில் காங்கிரஸ் பயன்படுத்தி உள்ளது. அதாவது கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களை தங்கள் கட்சியில் இணைத்து தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி தொடர் வெற்றிகளை பெற்று வந்தது.

500 பாஜகவினர்
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இதே வழியில்தான். இந்த ஆயுதத்தைதான் காங்கிரஸ் தற்போது கையில் எடுத்து தீவிரமாக பணியாற்ற தொடங்கி உள்ளது. அதன் விளைவாக தற்போது கர்நாடகாவின் சிக்மளூரு மாவட்டத்தை சேர்ந்த 500 பாஜகவினர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலைக்கும் சிக்கல்
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தனை பேர் கட்சி தாவுவது பாஜகவுக்கு நிச்சயம் சிக்கலாக அமையும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவருக்கும் இந்த தகவல் அதிர்ச்சியானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications