கல்லால் அடித்து.. கரும்பு காட்டில் இழுத்து சென்று பலாத்காரம்! ஆபாச படத்தால் வந்த வினை.. சிறுவன் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனுக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும் இதனால்தான் இந்த சம்பவத்தை சிறுவன் செய்திருக்கிறான் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை

கொலை

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை குறைக்க முறையான பாலியல் கல்வியும், ஆண்/பெண் சமத்துவத்தையும் கற்பிக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்


இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆலந்த் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை(நவ.1) 15 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதைகளை கழிக்க கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது 17 வயது சிறுவன் சிறுமியை பின்தொடர்ந்திருக்கிறார். சிறுமிக்கு முதலில் இது தெரியவில்லை. பின்னர் இதனை உணர்ந்த சிறுமி வேகமாக அங்கிருந்து நழுவ முயன்றிருக்கிறார். அப்போது சிறுவன் ஒரு கல்லை கொண்டு சிறுமியை தாக்கியுள்ளான்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இதில் நிலைகுலைந்து விழுந்த சிறுமியை மறைவான இடத்திற்கு சிறுவன் கொண்டு சென்றுள்ளான். அப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் சிறுமி கூச்சலிட்டது யாருக்கும் கேட்டிருக்கவில்லை. பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து துப்பட்டாவை கொண்டு அவரை கொலை செய்துள்ளான். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்கையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. தற்போது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஆபாச படம்

ஆபாச படம்

சிறுவன் ஆபாச படங்களை பார்த்து அதற்கு அடிமையாகிவிட்டதால்தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளான். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குழந்தைகள் செல்ஃபோனில் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இக்குற்றங்களை நம்மால் தடுக்க முடியும்" என்று குல்பர்கா காவல் கண்காணிப்பாளர் இஷா பந்த் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+