Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியல் மேன் vs வைல்டு.. காட்டில் 10 வருஷமா.. தில்லாக வசிக்கும் குடும்பம்! காரணத்தை கேட்டா ஆடிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் நடு காட்டில் வாழ்ந்து வரும் இரண்டு குடும்பத்தினர் தங்களை காடுகளை விட்டு அப்புறப்படுத்தி வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்றும், காட்டுக்கு வெளியே தங்க இடம் ஒதுக்கி தரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினரும் கடந்த 10 ஆண்டுகளாக காட்டுக்கு நடுவே வாழ்ந்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தின் சிக்கமகளூரு மாவட்டம் முடிகெரே தாலுகாவில் உள்ள சரகோடு தட்கோலா காப்புக்காடு பகுதியில்தான் இவர்கள் வசித்து வருகின்றனர். இந்த காட்டில் மான்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கேற்றார் போல புலிகளின் நடமாட்டமும் அதிகம். எனவே இவர்கள் ஒவ்வொரு நாளும் உயிரை கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகிறார்கள். எனவே இங்கிருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் இப்போது இருப்பதை போன்று மின்சார வசதிகளெல்லாம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கிடையாது. அப்படியான காலகட்டத்தில்தான் இந்த காட்டில் சுமார் 80 குடும்பங்கள் குடியேறியது. இவர்கள் காட்டில் உள்ள சுள்ளிகளை சேகரித்தும், விறகுகளை வெட்டியும் அன்றாடம் பிழைப்பை ஓட்டி வந்தனர். அதேபோல காட்டில் கிடைக்கும் தேனை விற்பனை செய்தும் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்களை காட்டிலிருந்து அப்புறப்படுத்த வனத்துறை முடிவெடுத்தது.

10 வருஷம்

10 வருஷம்

இந்த 80 குடும்பங்களில் 78 குடும்பங்கள் வெளியேற ஒப்புக்கொண்டன. ஆனால் 2 குடும்பங்கள் மட்டும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து இரண்டு குடும்பங்களை தவிர்த்து மீதமுள்ள குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றி காட்டுக்கு வெளியே ஒரு குடியிருப்பில் தங்க வைத்தனர். இதெல்லாம் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதில் மீதமிருந்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் தனியே வசித்து வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல வன பரப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. மட்டுமல்லாது காட்டு உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது.

கோரிக்கை

கோரிக்கை

இதன் காரணமாக இந்த இரண்டு குடும்பத்தினரும் காட்டை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். ஆனால், ஊருக்குள் இடம் வாங்கும் அளவுக்கு இவர்களிடம் காசு இருக்கவில்லை. எனவே அரசாங்கத்திடமும், வனத்துறையினரிடமும் தங்களை காட்டிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கையின் மீது யாரும் செவி சாய்க்கவில்லை. ஏறத்தாழ அனைத்து அரசு அதிகாரிகளை சந்தித்தும் மனு கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் இந்த மனுவின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மீதமிருக்கும் நாட்களை இவர்கள் தங்கள் உயிரை கையில் பிடித்தவாறு நகர்த்தி வருவதாக கூறியுள்ளனர்.

தேர்தல்

தேர்தல்

தற்போது கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வருவதால் இவர்கள் தொடர்பான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த இரண்டு குடும்பத்தில் வசிக்கும் இளைஞர்கள் கூறியதாவது, "நாங்கள் காட்டு விலங்குடன் விலங்காக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கென எவ்வித பாதுகாப்பும் கிடையாது. வீட்டின் அருகில் காட்டுப்பன்றி, புலி உள்ளிட்ட விலங்குகளை சாதாரணமாக காண முடிகிறது. எங்காவது வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புவதெனில் மாலை 6 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். இல்லையெனில் காட்டில் சிக்கிக்கொள்வோம்.

மாற்று இடம்

மாற்று இடம்

இன்னும் சில நாட்கள் இங்கு இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு காட்டு விலங்குக்கு பலியாகிவிடுவோம். ஏனெனில் எங்கள் வீட்டிற்கு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது அங்கிருந்து வெளியே வருவதாக இருந்தாலும் சரி அடர்ந்த புதர்களை கடந்துதான் வர வேண்டும் போக வேண்டும். இந்த புதரில் எப்போது எது மறைந்திருக்கும் என்பதை கணிக்க முடியாது" என்று கூறியுள்ளார். இந்த தேர்தல் சமயத்திலாவது தங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டு குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+