ஒரு வாலிபரை மணக்க.. 2 பெண்கள் போட்ட சண்டை! கடலில் குதித்த ஒரு பெண்..காப்பாற்ற போன காதலன் பரிதாப பலி!
பெங்களூர்: ஒரு இளைஞரை திருமணம் செய்ய இரண்டு பெண்கள் அடித்துக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சண்டையில் அந்த இளைஞர் பரிதாபமாக பலியானது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் ராணிப்புறா பகுதியை சேர்ந்தவர் லியொட்டி ஜோஷ்வா. இவர் அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
அப்பகுதியை சேர்ந்த அஷ்மிதா என்ற பெண்ணை இவர் கடந்த 8 வருடமாக காதலித்து வந்தார். இவரை சில மாதங்களில் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது.

புதிய காதலி டாக்லின்
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் டாக்லின் என்ற பெண்ணுடன் அந்த இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்து டேட்டிங் சென்றுள்ளனர். இந்த சந்திப்பு பாலியல் உறவில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் லியொட்டி ஜோஷ்வாவின் காதலி அஷ்மிதாவிற்கும் தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை வந்தது.

சோமேஸ்வரா கடல் பகுதியில் சந்திப்பு
கடைசியில் சமாதானம் அடைந்த அஷ்மிதா.. அனைத்தையும் பேசி தீர்க்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். எனவே மூன்று பேரும் சந்தித்து பிரச்னையை பேசி தீர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதையடுத்து டாக்லின், லியொட்டி ஜோஷ்வா, அஷ்மிதா எல்லோரும் சோமேஸ்வரா கடல் பகுதியில் சந்திப்பு நடத்தி உள்ளனர். காதலனை யார் பிரிவது, யார் மணப்பது என்று மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அஷ்மிதா கடலில் குதித்தார்
அப்போது திடீரென இரண்டு பெண்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மாறி மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் மனம் உடைந்து போன அஷ்மிதா விரக்தியில் கடலில் குதித்து உள்ளார். காதலன் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறி அஷ்மிதா கடலில் குதித்துள்ளார். இவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்று லியொட்டி ஜோஷ்வாவும் கடலில் குதித்துள்ளார்.

காதலன் மரணம்
கடலில் குதித்த அஷ்மிதாவை மீட்ட லியொட்டி ஜோஷ்வா நிறைய தண்ணீர் குடித்ததால் அங்கேயே மயங்கி விழுந்தார். ஆனால் கடலில் குதித்த அஷ்மிதா உயிர் பிழைத்துக் கொண்டார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட லியொட்டி ஜோஷ்வா வழியிலேயே மரணம் அடைந்தார். தண்ணீர் அதிகம் குடித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு இவர் பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications