பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலன்.. சப்போர்ட் செய்த தாயை வெளுத்த நீதிமன்றம்!

கர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலன் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என தாயே மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலன்- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலன் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என தாயே மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்காதல் உறவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் கள்ளக்காதல் குற்றமல்ல என கூறிய நிலையில் இது மேலும் அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

    இந்நிலையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலனுக்கு தாயே ஆதரவாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாவட்டம் மங்களூரு அருகே ஹரிபதே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். 34 வயதான இவருக்கும் பாவஞ்ஜே கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.

    [பரிதி இளம்வழுதி, இந்திரஜித், அபிமன்யு போன்றவர்.. ஸ்டாலின் புகழாரம்]

    அடிக்கடி தனிமையில்..

    அடிக்கடி தனிமையில்..

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். அந்த பெண் தனது மகள், மகனுடன் பாவஞ்ஜே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    மகளிடம் சில்மிஷம்

    மகளிடம் சில்மிஷம்

    இந்த நிலையில், ரமேஷ் தனது கள்ளக்காதலியின் வீட்டுக்கு செல்லும்போது, அந்த பெண்ணின் மகளான சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனிடம் கூறியுள்ளார்.

    யாரிடமும் சொல்லக்கூடாது

    யாரிடமும் சொல்லக்கூடாது

    ஆனால் அவர்கள் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக ரமேஷிடமும் அவர்கள் எதுவும் விசாரிக்கவும் இல்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தாயின் கள்ளக்காதலன் தொடர்ந்து சிறுமியிடம் அத்துமீறியுள்ளான்.

    பள்ளியில் நடந்த நிகழ்ச்சி

    பள்ளியில் நடந்த நிகழ்ச்சி

    இதனை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மனதில் குமுறிக்கொண்டிருந்தார் அந்த சிறுமி. இந்த நிலையில், சிறுமி படித்த பள்ளியில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறுமியின் துயரங்களை கொட்டும் வடிகாலாய் அமைந்தது.

    கதறிய சிறுமி

    கதறிய சிறுமி

    அப்போது அந்த சிறுமி தனக்கு நடக்கும் கொடுமைகளை தன்னுடைய ஆசிரியரிடம் கூறி கதறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார்.

    சிறப்பு கோர்ட்

    சிறப்பு கோர்ட்

    அதன்பேரில் முல்கி போலீசார் ‘போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். பின்னர், அவர் மீது மங்களூருவில் உள்ள பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி, போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த விசாரணையின்போது, குற்றவாளிக்கு ஆதரவாக சிறுமியின் தாயும், சகோதரனும் சாட்சி அளித்தனர். இந்த வழக்கு மங்களூரு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.

    கண்டனம்

    கண்டனம்

    இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி ரமேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையில் ரூ.20 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.மேலும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட சிறுமியின் தாய் மற்றும் சகோதரனுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

    English summary
    A mother supported her illicit lover to give sexual harassment to her daughter. illicit lover gets 5 years jail in this case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X