கர்நாடகா கொடூரம்: நள்ளிரவில் அலறிய பசுமாடுகள்.. கதற கதற 'பலாத்கார' முயற்சி அம்பலம்- சிக்கிய இளைஞர்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூரில் பசுமாடுகளிடம் நள்ளிரவில் தகாத உறவு வைக்க முயன்றதாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாளி ராகுல் என்பவர் போலீசில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விலங்குகள், கால்நடைகளுடன் தகாத உறவுக்கு முயற்சிப்பது ஒருவித மனப்பிறழ்வு என்கிறது மருத்துவ துறை. 2012-ல் ஜெர்மன் நாட்டில் இதுபோன்ற வினோத பிரச்சனை தலைதூக்கியது. விலங்குகளுடன் மனிதர்கள் உறவு கொள்வதற்கான பிரத்யேக விபசார பண்ணைகளே செயல்பட்டதுதான் உலகை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஜெர்மன் விசித்திரம்: அத்துடன் இல்லாமல், மனிதர்களுடன் உறவு கொள்வதற்காக விலங்குகளை பழக்கப்படுத்த 'ஆட்கள்' தேவை என விளம்பரங்களையும் ஜெர்மன் "குடிமக்கள்' செய்தது பெரும் பிரச்சனையாகவும் வெடித்தது. இதனைத் தொடர்ந்து விலங்குகளுடன் மனிதர்கள் உறவு கொள்வதை ஜெர்மன் அரசு அதிகாரப் பூர்வமாக தடை செய்தது.
மனப்பிறழ்வாளர்கள்: நமது நாட்டில் பசு புனிதமாக போற்றப்படுகிறது. ஆனால் பசு, நாய், ஆடு என எந்த ஒரு கால்நடை மற்றும் விலங்குகளையும் விட்டு வைக்காத மனப்பிறழ்வாளர்களும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்படி ஒரு வினோத பிறவியைத்தான் கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர்.
நள்ளிரவில் அலறிய மாடுகள்: கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூரை சேர்ந்த விவசாயி மாடுகளை வளர்த்து வருகிறார். நள்ளிரவு நேரமானாலே போதும்... கொட்டகையில் கட்டி இருக்கும் மாடுகள் துயரம் தோய்ந்த கதறல் குரலில் கத்தும் சப்தம் சுரேஷின் தூக்கத்தைக் கெடுத்து கொண்டிருந்தது. பகல் பொழுதில் தம்முடன் உலா வரும் மாடுகள் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்தில் இப்படி ஒரு ஓலத்தை ஏன் எழுப்புகிறது என்பது சுரேஷுக்கு புரியாத புதிராகவும் இருந்தது.
கேமராக்கள் மூலம் கண்காணிப்பு: மாடுகளின் நள்ளிரவு அலறலுக்கு காரணத்தை கண்டுபிடிக்க தூக்கத்தைத் தொலைத்த சுரேஷ், அங்கு கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தினார். இந்த கேமராக்கள் மூலம் மாட்டு கொட்டகையை கண்காணித்து வந்த போது, நள்ளிரவில் ஒரு மர்ம நபர் நாள்தோறும் மாட்டு கொட்டகைக்கு வந்து செல்வது தெரியவந்தது.
நள்ளிரவில் சிக்கிய மர்ம நபர்: இது தொடர்பாக சிக்பள்ளாப்பூர் போலீசுக்கு சுரேஷ் தகவல் தெரிவித்தார். இந்த புகாரின் மர்மம் போலீசாருக்கே அதிர்ச்சியாகவே இருந்தது. பின்னர் ஒருவழியாக நள்ளிரவில் மாட்டு கொட்டகைக்கு வந்த நபரை கையும் களவுமாக போலீசார் படை சூழ சுரேஷை வசமாக மடக்கிப் பிடித்தனர்.
பசுமாட்டிடம் தகாத உறவு: பிடிபட்ட நபர் ராகுல் என்பதும் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சிக்பள்ளாப்பூரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்த ராகுல், நள்ளிரவில் மாடுகளிடம் தகாத உறவு வைத்து கொள்ள முயற்சித்ததை ஒப்புக் கொள்ள போலீசார் அதிர்ந்து போயினர். இப்படியுமா ஜென்மங்கள் என தலையில் அடித்துக் கொண்டு 'காமவெறியன்' கொல்கத்தா ராகுலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications