"இதுதான் தரமான சம்பவம்.." ஓவராக வாய் பேசிய சொசைட்டி அங்கிள்.. ஒட்ட நறுக்கிய பெங்களூர் பெண்
பெங்களூர்: கர்நாடகாவில் தனது வீட்டில் தேவையில்லாமல் நுழைந்து மிரட்ட முயன்ற ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்களுக்கு 22 வயது பெண், சரியான பாடத்தைப் புகட்டியுள்ளார். இதை அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பான தகவல்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீட்டில் தனியாக இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஏகப்பட்ட ரூல்ஸ்ஸை போடுவார்கள். ஹவுசிங் சொசைட்டி என்ற பெயரில் போடப்பட்டும் இந்த ரூல்ஸ்கள் பல நேரங்களில் வினோதமாக இறுக்கும். சமீபத்தில் கூட இப்படித் தான் வீட்டில் பெண்களை அழைத்து வந்ததாகச் சொல்லி இளைஞர்களுக்கு அபராதம் போட்டார்கள். இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் தான் பெங்களூரில் மீண்டும் நடந்துள்ளது.

பெங்களூர் பெண்
ஆனால், இந்த முறை துணிச்சலாகச் செயல்பட்ட 22 வயது பெண், தனது ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளார். ரூ. 62 லட்சம் இழப்பீடு கோரி சிவில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதை அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பான தகவல்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். துணிச்சலாகச் செயல்பட்ட அந்தப் பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.
கடந்த சனிக்கிழமை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் அந்தப் பெண், தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். ஐந்து நண்பர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் பார்டி செய்யவில்லை. சத்தமான இசை கூட இல்லை. வீட்டில் டின்னர் சமைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவைத் தட்டிய ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்கள் தங்கள் அதிகாரத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
என்ன நடந்தது
இது தொடர்பாக அந்தப் பெண் தனது ரெட்டிட் பக்கத்தில், "அப்போது ஒரு அங்கிள் வீட்டின் கதவைத் தட்டினார்.. வெளியாட்கள் யாருக்கும் இங்கு அனுமதி இல்லை எனக் கத்திய அவர், உடனே ஓனருக்கு போன் செய்யும்படி சொன்னார். நான்தான் இந்த வீட்டின் ஓனர், தேவையில்லாத விஷயங்களை மூக்கை நுழைக்காதீர்கள் என சொல்லி கதவைச் சாத்திவிட்டேன். இது அவரது ஈகோவை டச் செய்துவிட்டது என நினைக்கிறேன்.
உடனே அவர் 4, 5 பேருடன் எனது வீட்டிற்கு வந்தார். எனது அனுமதி இல்லாமல் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். நானும் என்னுடைய நண்பர்களும் மது அருந்துவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் வாய்க்கு வந்ததைப் பேசினர். மேலும், அடுத்த நாளே வீட்டைக் காலி செய்ய வேண்டும் என மிரட்டினர்.
போலீசார்
நிலைமை மோசமாவதை உணர்ந்த எனது நண்பர்கள், அத்துமீறி நுழைந்தவர்களை வெளியே தள்ளினர். அப்போது எனது வீட்டைச் சோதனை செய்வதாகச் சொல்லி, ரூமிற்குள் செல்ல முயன்றார். அத்துமீறிய அவருக்கு ஓர் அறை கிடைத்தது. அவர்கள் சொன்னதை நான் கேட்காததால் உடனே அந்த ஹவுசிங் சொசைடி அங்கிள்கள் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து விசாரித்தனர்.. வீட்டின் உரிமையாளர் யார் என்று கேட்டதற்கு, நான்தான் ஓனர் என்றேன். அவர்கள் ஆவணங்களைக் காட்டச் சொன்னபோது நான் மறுத்துவிட்டேன்; ஏனெனில், நாங்கள் எந்தத் தொந்தரவும் செய்யவில்லை.. என் வீட்டிற்குள் நுழைய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் தனியாக வாழும் நிலையில், பாதுகாப்புக்காக ஹாலில் கேமரா வைத்திருக்கிறேன். அன்று நடந்த அனைத்தும் கேமராவில் பதிவாகி இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்து நடந்தது என்ன
அவர் இன்னொரு பதிவில், "அத்துமீறி வீட்டில் நுழைந்தவர்களுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளேன். சிசிடிவி காட்சிகளைக் கட்டுமான நிறுவனத்திடமும், ஹவுசிங் சொசைட்டி தலைவரிடமும் காட்டினேன். உடனடியாக அத்துமீறிய ஊழியர்களைப் பதவியிலிருந்து நீக்கினார்கள். மேலும், ஒவ்வொருவருக்கும் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நான் அத்தோடு நிற்கவில்லை. இந்த விவகாரத்தில் ரூ.62 லட்சம் இழப்பீடு கோரினோம். இந்தியாவில் இவ்வளவு பெரிய இழப்பீடு கிடைக்காது என்பதை வழக்கறிஞர் வெளிப்படையாகக் கூறினார். ஆனால், 10-12 சதவீதம் கிடைத்தாலும் அது கணிசமான தொகையாகவே இருக்கும். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் என்னைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதற்கான நிரந்தரத் தடையையும் நாங்கள் கோரியுள்ளோம்" என பதிவிட்டுள்ளார்
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications