திப்பு சுல்தான் பற்றி பேசினால் நாக்கை அறுப்போம்.. கர்நாடக அமைச்சருக்கு வந்த மிரட்டல்.. போலீசில் புகார்
பெங்களூரு: கர்நாடகாவில் திப்பு சுல்தான் குறித்து விமர்சித்த நிலையில், எனது நாக்கை வெட்டிவிடுவதாக சிலர் எனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக அமைச்சர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சுதந்திர தினம் அன்று ஆளும் கட்சியான பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படம் இடம் பெறவில்லை.
இதற்கு பதிலாக வீர சவார்கர் படம் இடம் பெற்று இருந்தது. இதனால் இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

காரில் முட்டை வீசப்பட்டது
பாஜகவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் கார் மீது மூட்டை வீசப்பட்டது. அதேபோல், ஷிமோகா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் சவார்க்கரின் படம் கிழிக்கப்பட்டதால் வன்முறையும் வெடித்தது. இதேபோல் சுதந்திர தினத்தின் போது ஷிவமோகாவில் உள்ள அமீர் அகமது சர்கிள் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த வீரசவார்கர் போஸ்டரை, திப்பு சுல்தான் ஆதரவாளர்கள் அகற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

ரத யாத்திரை
இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மிகவும் பதற்றமாக சூழல் நிலவியதால், அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவங்களால் கர்நடகாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவார்க்கர் சித்தாந்தங்களை பரப்பும் நோக்கில் பாஜக சார்பில் 8 நாட்களுக்கு ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. மைசுரூவில் சவார்க்கர் ரத யாத்திரை கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நாக்கு துண்டிக்கப்படும்
சவார்க்கர் ரத யாத்திரைக்கு கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முஸ்லிம் அமைப்புகளும் இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக பேசிய கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, ஷிவமோகா மாவட்டத்தில் சிறுபான்மையினர்கள் மத கலவரத்தை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், திப்பு சுல்தானை அவமரியாதையாக இனிமேலும் பேசினால் தனது நாக்கு துண்டிக்கப்படும் என்று எனது வீட்டிற்கு மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையில் அமைச்சர் ஈஸ்வரப்பா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

குண்டர்கள் என நான் கூறவில்லை
இது குறித்து அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகையில், ''அனைத்து முஸ்லிம்களையும் குண்டர்கள் என நான் ஒருபோதும் கூறவில்லை. முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள முன்னோர்கள், பெருமக்கள் சமூக அமைதிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். எனவே, தற்போது அராஜகங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று முஸ்லிம் பெருமக்களை கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications