இனி கோவிலில் திருமணம் கிடையாது.. அறிவித்த நிர்வாகம்.. விவாகரத்து வழக்குகளால் அலறிய அர்ச்சகர்கள்.. பின்னணி
பெங்களூர்: சோழர் கால வரலாற்று சிறப்பு மிக்க கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடப்பது வழக்கம். ஆனால் தற்போது அந்த கோவிலில் திருமணங்கள் செய்து வைப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி விசாரித்தபோது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கோவிலில் திருமணம் செய்த பல தம்பதிகள் விவாகரத்து கோரி உள்ளனர். இதனால் திருமணம் செய்து வைத்த அர்ச்சகர்கள் சாட்சியாக நீதிமன்றத்துக்கு அலையும் நிலை வந்துள்ளதால் திருமணம் செய்து வைக்கப்படாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெங்களூரில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று சோமேஸ்வரா சுவாமி கோவில். இந்த கோவில் பெங்களூர் அல்சூரில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. சோழர் கால வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் சிவன் உள்ளார். இந்த கோவிலில் நீண்ட காலமாக ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக முகூர்த்த நாட்களில் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடக்கும். ஆனால் சில ஆண்டுகளாக கோவிலில் திருமணம் செய்து வைப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இது பலருக்கும் கேள்விகளை எழுப்பியது. இருப்பினும் கோவில் நிர்வாகம் மவுனம் காத்து வந்தது.
இந்நிலையில் தான் தற்போது அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் திருமணம் புதுமண ஜோடிகள் பலரும் விவாகரத்து கோரி நீதிமன்றம் படிகட்டுகளை ஏறி உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் அடிக்கடி கோவில் அர்ச்சகர்கள் விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றங்கள் செல்ல வேண்டி உள்ளது. இது அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.
அதாவது விவாகரத்து வழக்குகளில் கோவிலில் திருமணம் செய்து வைத்த அர்ச்சகர்களும் சாட்சியாக நீதிமன்றம் சென்று வருகின்றனர். குறிப்பாக சில காதல் ஜோடிகள் கோவிலில் வந்து திருமணம் செய்துவிட்டு இப்போது விவாகரத்து கோரி உள்ளனர். இவர்களால் அர்ச்சகர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இதனால் தான் கோவிலில் இனி திருமணம் செய்து வைக்கப்படமாட்டாது என்று இப்போது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை ஐந்துக்கும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கோவில் நிர்வாகம் 50க்கும் அதிகமான விவாகரத்து தொடர்பான வழக்குகளை கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் தான் கோவில் நிர்வாகம் ஆளை விட்டால் சரி என்று திருமணம் நடத்தி வைப்பதையே நிறுத்தி உள்ளது.
இதுபற்றி கோவில் நிர்வாகம் சார்பில் கர்நாடகா முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், ‛‛விவாகரத்து வழக்குகளில் சாட்சிகளாக நீதிமன்றத்திற்கு அடிக்கடி அர்ச்சகர்கள் அழைக்கப்படுகின்றனர். அர்ச்சகர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கோவில் நிர்வாக அதிகாரி வி கோவிந்தராஜூ கூறுகையில், ‛‛ஏராளமான ஜோடிகள் தங்களின் குடும்பத்தை விட்டு வெளியேறி போலியான ஆவணங்கள் தந்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதன்பிறகு சில நாட்களில் அவர்களின் பெற்றோர்கள் புகாரளிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படுகிறது. இது கோவிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது'' என்றார்.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மாமா உன் பொண்ண கொடு..அட ஆமா சொல்லிபுடு" இனி செல்லாது! சொந்தத்துக்குள் திருமணத்திற்கு ஸ்வீடன் தடை! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் பயிற்சி பற்றி விஷமத்தனமான கருத்து.. அறநிலையத் துறை விளக்கம் -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications