உல்லாசத்துக்கு பின் திருமணத்துக்கு மறுப்பு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபர புகார்.. பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் பண பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க சென்றபோது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததாக இன்ஸ்பெக்டர் மீது 36 வயது பெண் பரபரப்பான புகாரை முன்வைத்துள்ளார். மேலும் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததோடு, சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக அந்த பெண் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் டிஜே ஹள்ளியில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுனில். இவர் மீது 36 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததாகவும், தற்போது திருமணத்துக்கு மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

அதுமட்டுமின்றி இருவருக்குமான உறவு பற்றி வெளியில் கூறினால் ஒன்றாக சேர்ந்து இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதாகவும், கொலை செய்வதாகவும் மிரட்டி உள்ளார்.
இதுபற்றி அந்த 36 வயது பெண் அளித்த புகாரில், ‛‛கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணம் சார்ந்த பிரச்சனையால் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். அப்போது தான் இன்ஸ்பெக்டர் சுனிலுடன் அறிமுகம் ஆனேன். எனக்கு உதவி செய்வதாகவும், என்னுடைய பணத்தை பெற்று கொடுப்பதாகவும் கூறினார். அதன்பிறகு இருவரும் வணக்கம் என்று அவ்வப்போது மெசேஜ் செய்து கொண்டோம். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
அப்போது அவர் என்னை யாருடனும் தொடர்பில் இருக்க வேண்டாம் என்று கூறினார். என்னை யாரிடமும் பழக வேண்டாம் என்று கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும் பதிவு திருமணம் செய்து கொள்வோம். எங்கேயும் செல்ல வேண்டாம். சில முறை ஒன்றாக உல்லாசமாக இருந்தோம். நான் திருமணத்துக்கு வலியுறுத்தியபோது அவர் தாமதம் செய்து வந்தார். பிறகு பியூட்டி பார்லர் தொடங்க உதவி செய்வதாகவும் கூறினார்.
பெங்களூரில் ஒரு வீடு வாங்கி தருவதாகவும், அந்த வீட்டில் இருவரும் சேர்ந்து வசிப்பதாகவும் கூறினார். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. திருமணத்துக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். நான் தொடர்ந் வலியுறுத்தியபோது என்னை மிரட்டினார். இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை காட்டி வெளியிடுவதாகவும், இருவருக்குமான உறவை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார்'' என்று கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications