பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய புதுப்பெண்.. கர்நாடகத்தில் ஒரு கலாட்டா கல்யாணம்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலம் விஜயபுரி மாவட்டத்தில் சமூக சீர்த்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியது.

ஆணும் பெண்ணும் சமம் என பேச்சளவில் சொல்லி விட்டால் மட்டும் போதுமா. ஆம் என்று செயல்பாட்டில் காண்பித்துள்ளனர் கர்நாடகத்தில் உள்ள குடும்பத்தினர்.

Bride ties holy rope on groom in Karnataka

கர்நாடக மாநிலம் லிங்காயத்து சமயத்தை தோற்றுவித்த பசவண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் குடும்பத்தினர் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்த்திருத்தவாதி பசவண்ணாவின் பாலின சமத்துவ கொள்கையை பின்பற்றி வருகிறார்கள்.

அதன்படி திருமணத்தின் போது வேத மந்திரங்கள் ஓதுவது, கன்னியாதானம் செய்வது, அட்சதை தூவுவது உள்ளிட்ட சடங்குகளையும் செய்ய மாட்டார்கள். மேலும் மணமகள் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுவதற்கு பதிலாக மாப்பிள்ளை கழுத்தில் மணமகள் தாலி கட்டுவார்.

 ஜீன்ஸ், டீ-சர்ட்.. ஐடி இளைஞர் லுக்கில் கலக்கிய ராகுல் காந்தி.. சென்னை கல்லூரியில் கலகலப்பு ஜீன்ஸ், டீ-சர்ட்.. ஐடி இளைஞர் லுக்கில் கலக்கிய ராகுல் காந்தி.. சென்னை கல்லூரியில் கலகலப்பு

இது போன்ற ஒரு திருமணம் விஜயபுரா மாவட்டத்தில் நடந்தது. நாலத்தவாடா கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபுரா- அங்கிதா,
அமித்- பிரியா ஆகிய இரு ஜோடிகளுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்தனர்.

இந்த திருமண விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மணமகன்களது கழுத்தில் மணப்பெண்கள் தாலி கட்டினர். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தாம்பூலத்துக்கு பதிலாக பசவண்ணாவின் தத்துவங்கள் அடங்கிய புத்தகங்களை கொடுத்தனர். இந்த திருமணங்களுக்கு முகூர்த்த நேரம் கூட குறிக்க மாட்டார்கள்.

English summary
Bride ties Mangalsutra on grooms in Karnataka as they follows Basavanna's policies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X