மனைவியின் "விபச்சாரம்".. தகாத உறவை நிரூபிக்க மெடிக்கல் சான்றிதழ் செல்லாது! கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு
மருத்துவ பதிவுகள் கோர்ட்டில் செல்லுபடியாகாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
பெங்களூரு: மருத்துவ பதிவுகள் என்பது தனிப்பட்டவை.. விபச்சாரத்தை நிரூபிக்க அதை ஒருபோதும் பயன்படுத்த முடியாது.. அதை வைத்து, மனைவியின் தவறான உறவை நிரூபிக்கவும் முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தார்வாட் பெஞ்ச் தன்னுடைய உத்தரவில் கூறியுள்ளது.
கள்ளக்காதல் குற்றமாகாது என்பது போன்ற உத்தரவுகள் வந்ததில் இருந்தே, பல்வேறு வழக்குகளின் உத்தரவுகளும் இதுபோலவே வர ஆரம்பித்துள்ளன..
திருமணத்திற்கு பின்பு கணவரால் மனைவி அனுபவிக்கும் பாலியல் வன்முறையானது, விவாகரத்து கோருவதற்கு போதுமான காரணமாக உள்ளது, மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு வைத்திருந்தாலும் அது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சத்தீஸ்கர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

உடலுறவு
ஆனால், மனைவி மீது எவ்வித எதேச்சதிகாரத்தையும் கணவர் கோர முடியாது, மனைவியின் உடல் தனக்கு சொந்தமானது என்று கருதி அவரது விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வது கணவர் மனைவி மீது செலுத்தும் வல்லுறவே என்று கேரள ஐகோர்ட் வழக்கில் ஒருமுறை சுட்டிக்காட்டி இருந்தது. இப்படி பல்வேறு மாநிலங்களில் மாறுபட்ட வழக்குகளும், அந்த வழக்கை ஒட்டிய உத்தரவுகளும் வந்து கொண்டேதான் இருக்கின்றன..

விவாகரத்து
அந்த வகையில் இப்போது ஒரு புதுவிதமான உத்தரவு வந்துள்ளது.. இந்த உத்தரவு கர்நாடக ஹைகோர்ட்டில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மனைவி 2 வருடங்களாக தன்னை மிருகத்தனமாக நடத்தி வருவதாகவும், தன்னை ஏமாற்றி வருவதாகவும் கணவர் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு சென்றுள்ளார்.. இதையறிந்த சம்பந்தப்பட்ட மனைவியும், கணவரிடம் இருந்து செலவு தொகை கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் கேஸ் போட்டுள்ளார்.. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது..

தனிநபர்
அப்போது, மனைவியின் தகாத உறவை நிரூபிப்பதற்கு டாக்டரை ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது... ஆனாலும், இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதை போன்றதாகும், தனிப்பட்ட நபரின் மருத்துவ ஆவணங்களை கணவர் உட்பட யாரும் கேட்டுப் பெற முடியாது என்று சொல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஹைகோர்ட்டை நாடினார் மனைவி.. தர்வாத் கிளை கோர்ட்டில் மேல்முறையீடும் செய்தார்..

ஆணை
இந்த வழக்கு நீதிபதி என்எஸ் சஞ்சய் கவுடா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, மனைவியின் தரப்பிலான மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் டாக்டரை ஆஜராகும்படி சொல்வதற்கு வலிமையான காரணங்கள் தேவைதான்.. ஆனால், பொதுநலன் கருதும் நேரங்களில் மட்டுமே அவ்வாறு உத்தரவிட முடியும்..

ஆவணங்கள்
மனைவி அபார்ஷன் செய்ததாக சொல்லி, அதற்காக மருத்துவரை ஆஜராக வேண்டும் என்று கணவரின் மனுவை ஏற்பது விதிமீறலாகும்... மனிதர்களின் மருத்துவ ஆவணங்களை பொதுப் பார்வைக்கு கொண்டு வருவது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 அளித்துள்ள தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது போல அமையும்... இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், அது மருத்துவர் மற்றும் நோயாளியின் ரகசியத்தன்மையின் முழுக் கருத்தையும் அழித்து, மருத்துவரை பிரச்சனைக்கு உள்ளாக்கிவிட்டுவிடும்.. தனிப்பட்ட நபரின் மருத்துவ ஆவணங்களை இப்படி சமர்ப்பிக்க கோரக்கூடாது" என்று என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications