"இது தொடக்கம்தான்.. காவிரி விஷயத்தில் தமிழகம் அரசியல் செய்வதை விடமாட்டோம்!" வாட்டாள் நாகராஜ் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி விவகாரம் இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் சூழலில், அத்திபள்ளி எல்லை பகுதியில் கன்னட அமைப்பினர் போராட்டத்தை நடத்தினர். அதாவது அத்திபள்ளி மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் செய்து, வாகனங்களை முடக்கினர். இதனால் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி விவகாரத்தில் இப்போது மீண்டும் மோதல் போக்கு உருவாகியுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகா மறுப்பதே இதற்கு காரணமாகும். இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக மாறியுள்ள நிலையில், இன்றைய தினம் அடையாள போராட்டத்தை கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

cauvery India Cauvery Water dispute

போராட்டம்

அதாவது தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்ல தலவாடி/ஜெர்மலம் (ஈரோடு மாவட்டம்), நீலகிரி/பந்திப்பூர் மற்றும் பாலாறு (சேலம் மாவட்டம்) என பல ரூட்கள் உள்ளன. அதில் தேசிய நெடுஞ்சாலை 44ல் அமைந்துள்ள அத்திபள்ளி ஓசூர் சாலை முக்கிய நெடுஞ்சாலை முக்கியமானது. பெரும்பாலும் கார் மூலம் செல்லும் ஐடி ஊழியர்கள் இந்த வழியாகவே செல்வார்கள். இந்த என்டரி பாயிண்டை தான் மூடப்போவதாக கன்னட அமைப்பினர் அறிவித்தனர். தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் வாகனங்களும் அனுமதிக்கப்படாது என கன்னட ஆர்வலர்கள் கூறினர்..

கோரிக்கை

கன்னட அமைப்புகளின் மூத்த தலைவரான வாட்டாள் நாகராஜ், சனிக்கிழமை மைசூருவில் நடைபெற்ற போராட்டத்தின்போது அத்திபள்ளி எல்லையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, காலை 11 மணி முதல் இரு திசைகளிலும் வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சில கன்னட அமைப்பினரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, பின்னர் விடுவித்தனர். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டை குற்றஞ்சாட்டிய கன்னட அமைப்புகள், கர்நாடகாவின் நீர்வள உரிமைகளில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தின.

மேகதாது அணை திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் வட கர்நாடகாவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மகதாயி நதியின் நீரைத் திருப்பும் கலசா-பண்டூரி திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், முன்மொழியப்பட்டுள்ள பிடாடி சாட்டிலைட் நகர திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் சில போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

வாட்டாள் நாகராஜ்

போராட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், "வரும் 13ஆம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடைபெறும். எந்த சூழ்நிலையிலும் அந்த. போராட்டம் வாபஸ் பெறப்படாது" என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மாணவர்கள் சிலர் சமீபத்தில் கன்னடத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாக கூறிய அவர், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும், பெங்களூரில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வரும் 13ஆம் தேதி நடைபெறும் பந்த்தில் பங்கேற்க வேண்டும்.. இது ஒரு தொடக்கம் தான். காவிரி விஷயத்தில் தமிழ்நாடு அரசியல் செய்தால் நாங்கள் விடமாட்டோம்" என்று வாட்டாள் நாகராஜ் பேசினார்.

பாதுகாப்பு

போராட்டத்தை முன்னிட்டு கர்நாடகா-தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தினர். முக்கிய சாலைகள், நெடுஞ்சாலை சோதனைச் சாவடிகள் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே செல்லும் வாகனங்களின் நடமாட்டத்தையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

ஏன் அத்திபள்ளி?

தமிழகம்- கர்நாடகா இடையிலான முக்கியமான சாலை இணைப்புகளில் ஒன்றாக அத்திபள்ளி உள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம் நோக்கி செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இது உள்ளது. இதனால் தான் போராட்டத்துக்கு அத்திபள்ளி எல்லை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய எல்லை முற்றுகை போராட்டம் என்பது ஒரு நாள் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நடைபெறும் போராட்டமாக இருந்தாலும், ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற உள்ள மிக பெரிய மாநிலம் தழுவிய பந்த்துக்கு முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 13ல் கர்நாடகா பந்த்

கர்நாடகாவின் நீண்டகால கோரிக்கைகளான மேகதாது, கலசா-பண்டூரி திட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து ஆகஸ்ட் 13ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்பட உள்ளதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இந்த பந்த்துக்கு 2,000க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 3,000ஐ தாண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பெங்களூர் மற்றும் மைசூரில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களும் தங்கள் நிறுவனங்களை மூட வேண்டும் என நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பந்த்தை கைவிடுமாறு வட்டாள் நாகராஜிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த கோரிக்கையை நாகராஜ் நிராகரித்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+