முதலில் வெற்றி.. நள்ளிரவில் இடியாக இறங்கிய தோல்வி செய்தி.. கதறி அழுத காங்கிரஸ் பெண் வேட்பாளர்!
பெங்களூர் : கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் முதலில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 3 முறை மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டதும், கதறி அழுதபடியே, வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார் சௌமியா ரெட்டி.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக சி.கே ராமமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளராக சவுமியா ரெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக கலிகவுடா ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட 177 தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் வந்து நிலைமையை ஆராய்ந்தனர்.
பின்னர், தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. 3 முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. மின்னணு வாக்கு எண்ணிக்கையும் மீண்டும் நடைபெற்றதால் வாக்கு எண்ணிக்கை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அதில், பாஜகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.
பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி 57 ஆயிரத்து 797 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 57 ஆயிரத்து 781 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் 1 ஆயிரத்து 226 வாக்குகள் பெற்றார்.

மறு வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி கண்ணீர் விட்டு அழுதுகொண்டே வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை கேட்டு சட்டப் போராட்டம் நடத்தியவர்களில் சவுமியா ரெட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கர்நாடகா மாநில மகளிர் காங்கிரஸ் செயலாளராக இருந்து வருகிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications