காவிரி பிரச்சனை.. ராஜ்யசபா போலவே பிரஸ் மீட்டிலும் ஓவர் சீன் போட்ட மாஜி பிரதமர் தேவகவுடா!
பெங்களூர்: காவிரி பிரச்சனை தொடர்பாக வழக்கம் போல கண்ணீரும் கம்பலையுமான செய்தியாளர்களை சந்தித்து உருக்கமாக பேசியுள்ளார் பாஜகவின் புதிய கூட்டணி கட்சியான மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு வெறும் 5,000 கன அடி நீரை மட்டுமே திறக்க உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இந்த சொற்ப நீரைக் கூட தமிழ்நாட்டுக்கு திறக்கவே கூடாது என கன்னடர்கள் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர்.

கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள்: கர்நாடகவின் மண்டியாவில் பந்த், நாளை பெங்களூர்வில் பந்த், செப்டம்பர் 29-ல் கர்நாடகா பந்த் என தமிழ்நாட்டுக்கு எதிராக மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன கன்னட அமைப்புகள். இந்த போராட்டங்களுக்கு கர்நாட்காஅ பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. பாஜகதான் இத்தகைய போராட்டங்களை முதன் முதலில் நடத்தியது.
சட்டப் போராட்டத்தில் தமிழ்நாடு உறுதி: தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவே முடியாது; சட்டப்பூர்வமான போராட்டம் மட்டுமே தமிழ்நாட்டுக்கான உரிமையை பெற்றுத் தர முடியும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்கள், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மத்திய குழுவை அனுப்புஙக: அண்மையில் ராஜ்யசபாவில் பேசிய முன்னாள் பிரதமர் தேவ கவுடா, கர்நாடகா, தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களின் எம்.பிக்களைக் கொண்ட 5 பேர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டும். கர்நாடகாவின் நதிநீர் நிலவரம் என்ன என்பதை இந்த ராஜ்யசபாவுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் இந்த ராஜ்யசபா என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.
எத்தனை காலம் உயிருடன் இருப்பேனோ: தற்போது எனக்கு 91 வயதாகிறது. கடந்த 60 ஆண்டுகளாக காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறேன். நான் இன்னமும் எத்தனை காலம் உயிருடன் இருப்பேன் என தெரியாது. என் வாழ்நாள்{ முடிவதற்குள் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என தேவ கவுடா பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு ராஜ்யசபாவிலேயே திமுகவின் திருச்சி சிவா எம்.பி கடும் எதிர்ப்பையும் பதிவு செய்தார்.
ஓவர் சீன் போட்ட தேவ கவுடா: தற்போது மீண்டும் தேவகவுடா, பெங்களூர் பிரஸ் மீட்டில் இதே பல்லவியை இதே உருக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவ கவுடா, கர்நாடகாவின் நீர் இருப்பு நிலைமையை ஆராய மத்திய அரசு உடனே ஒரு குழுவை அனுப்பி வைக்க வேண்டும். நான் உயிருடன் இருபப்தே அரசியலுக்கோ அதிகாரத்துக்கோ அல்ல. கர்நாடகா மாநில மக்களைப் பாதுகாக்கத்தான். என்னுடைய கட்சியும் அதற்குதான் இருக்கிறது என ரொம்பவே மனமுடைந்து கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.












Click it and Unblock the Notifications