மேகதாது அணை விரைவில் கட்டப்படும்.. 2,500 ஏக்கர் மாற்று வன நிலம் பார்த்தாச்சு.. டிகே சிவக்குமார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மேகதாது அணை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாய நிலம் மற்றும் வன நிலத்திற்கு மாற்று நிலத்தை கண்டறியும் பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு இருந்தது. இந்நிலையில், 2,500 ஏக்கர் மாற்று வன நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். மேலும், மேகதாது அணை கட்ட விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் மேகதாது அணையால் கர்நாடகாவில் 66 டிஎம்சி நீரை சேமித்து வைக்க முடியும். 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் பேசியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. காவிரி பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என்றும், மேகதாது அணை கட்டினால் பெங்களூருக்கும் குடிநீர் பிரச்சினை தீரும் என்றும் பேசி வருகிறார்கள்.

DK Shivakumar said Mekedatu dam project will be received soon We identified 2 500 acres of alternative forest land

டிகே சிவக்குமார் பேச்சு

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்ட 2,500 ஏக்கர் மாற்று வன நிலத்தை அடையாளம் கண்டு இருக்கிறோம் என்றும், இந்த அணை திட்டத்துக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக டிகே சிவக்குமார் கூறியிருப்பதாவது:-

மேகதாது அணை திட்டத்தால் கர்நாடகாவில் 66 டிஎம்சி நீரை சேமித்து வைக்க முடியும். 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் அதன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் மண்டியா மற்றும் காவிரிப் படுகை, பிற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்க முடியும்.

2,500 ஏக்கர் நிலம்

மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்துவதால் மேகதாது பகுதியில் இழப்பாகும் வனத்துறை நிலத்துக்கு, மாற்று வன நிலத்தை வழங்க நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம். இதுவரை 2,500 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம். மீதமுள்ள நிலத்தை கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாற்று நிலம் குறித்த விவரங்களை வன அனுமதி இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

இதையடுத்து நமக்கு தேவையான அனுமதி கிடைக்கும். இந்த திட்டத்திற்காக விவசாயிகளின் சுமார் 500 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும். மேகதாது அணை திட்டம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருடன் பேசி இருக்கிறேன். மேலும் அணை கட்டுவதற்கு பாஜக தலைவர்கள் ஒத்துழைப்பையும் கேட்க முடிவு செய்து இருக்கிறேன். அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குள் இந்த திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன்." என பேசியுள்ளார்.

மாற்று நிலம் ஏன்?

பெங்களூர் தெற்கு மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்காக மொத்தம் 12,979 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக ரூ.16,745 கோடி நிதி ஒதுக்கவும் முடிவு செய்து இருக்கிறது. ஆனால் இந்த மேகதாது அணை திட்டத்தால் காவிரியின் முக்கிய வனப்பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் 7,862 ஏக்கர் நிலம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சுமார் 4,619 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள சுமார் 8.90 லட்சம் மரங்களை வெட்டவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோன்று 500 ஏக்கர் விவசாய நிலங்கள் அழியும் எனவும் கூறப்படுகிறது. எனவே தான் விவசாய நிலம் மற்றும் வன நிலத்திற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது 2,500 ஏக்கர் வன நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+