இது என்ன கொடுமை..பெங்களூரில் இளம் பெண்ணை கடத்திய சாப்ட்வேர் இன்ஜினியர்.. மனைவியோடு கைது
பெங்களுர்: பெங்களூர் நகரில் விண்வெளி அமைப்பின் பெண் இன்ஜினியரை கடத்திய சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் யோகா ஆசிரியர் விகாஸ். இவர் 2015-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.
இவருக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் 2021-ம் ஆண்டு விண்வெளி இன்ஜினியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெங்களூரின் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இளம்பெண் கடத்தல்
ஜனவரி 6 -ம் தேதி 22 வயது பெண் அலுவலகத்திற்குச் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை, எலக்ட்ரானிக் சிட்டி அருகேயுள்ள, ஜிகினி பகுதியில் தடுத்து நிறுத்தி உள்ளனர். அந்த பெண் ஸ்கூட்டியில் ஒருவர் மீது மோதி விட்டதாக என்று அவரிடம் பணம் கறக்க திட்டமிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தன்னிடம் சிலர் தகராறு செய்வதாக தந்தை விகாசிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு போது மகளை அந்த மர்ம கும்பல் கடத்தியது தெரியவந்தது.

5 தனிப்படை அமைப்பு
இந்த சம்பவம் குறித்து விகாஸ் போலீசில் புகார் கொடுத்தார். பெங்களூர் ஊரக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.வம்சி கிருஷ்ணா குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகளை அமைத்தார். இதற்கிடையே 'உங்கள் மகளை விடுவிக்க வேண்டுமானால், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும்' என்று மர்ம நபர்கள் விகாஷிடம் போன் செய்து மிரட்டினார்கள். செல்போன்கள் அடிக்கடி ஸ்விட்ச் ஆப் செய்யப்ட்டதால் மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

பெண்ணை மீட்டனர்
இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவர் விகாஸுக்கு போன் செய்த செல்போன் எண் மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தபோது அவர்கள் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். கடந்த 13-ம் தேதி குற்றவாளி ஒருவரின் வீட்டில் இருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் அவரை கடத்தியவர்கள் தப்பி ஒடி விட்டனர். இந்த நிலையில் இளம்பெண்ணை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்கள் ஹுலிமாவு அருகே உள்ள தொட்டகம்மனஹள்ளியைச் சேர்ந்த பார்த்திபன் (34), அவரது மனைவி வசந்தா பார்த்திபன் (30), ரவிச்சந்திரா (28), மற்றும் முகமது சுலைமான் (25) என்பது தெரியவந்தது. பார்த்திபன் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். பெண்ணின் குடும்பத்தாரிடம் பணம் பறிக்க திட்டமிட்டு இளம்பெண்ணை கடத்தியதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications