அடிமை.. டம்மி தலைவர்.. சொந்த மாநிலக்காரர்னு கூட பார்க்கலையே.. மல்லிகார்ஜூன கார்கேவை தாக்கிய சிடி ரவி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவின் சுதந்திரத்துக்காக பாஜக தலைவர்களின் வீடுகளில் உள்ள நாய் கூட உயிர் தியாகம் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசிய நிலையில் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர் என பாராமல் ‛அடிமை, டம்மி தலைவர்' என கடும் வார்த்தைகளால் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி விமர்சித்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வந்தார். இவர் உடல் பிரச்சனையால் சிரமப்பட்டார்.

இதையடுத்து சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சசீதரூரை வீழ்த்தி மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். இவர் கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்தவர்.

பாஜகவினர் மீது விமர்சனம்

பாஜகவினர் மீது விமர்சனம்

இந்நிலையில் தான் மல்லிகார்ஜூன கார்கே பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியை அவர் ஆக்ரோஷமாக விமர்சனம் செய்து வருகிறார். பிரதமர் மோடிக்கு ராவணன் போன்று 10 தலை உள்ளதா? என குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசியது சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே இன்னொரு விவாதத்துக்குள் சிக்கினார்.

நாய் கூட உயிர் தியாகம் செய்யல..

நாய் கூட உயிர் தியாகம் செய்யல..

அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடந்தது. இந்த வேளையில் மல்லிகார்ஜூன கார்கே பேசியபோது, ‛‛காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி உயிர் தியாகம் செய்தனர். ஆனால் பாஜக எதையும் இழக்கவில்லை. அவர்களின் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா?'' என கேள்வி எழுப்பினர்.

வெடித்த சர்ச்சை

வெடித்த சர்ச்சை

மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது. நாய் என மல்லிகார்ஜூன கார்கே பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் இருகட்சியினர் இடையேயான விவாதம் ஆக்ரோஷமான நிலைக்கு சென்றது.

 சிடி ரவி கடும் விமர்சனம்

சிடி ரவி கடும் விமர்சனம்

இந்நிலையில் இந்த விவகாரத்தில் கர்நாடகா எம்எல்ஏவும், பாஜகவின் தேசிய செயலாருமான சிடி ரவி, மல்லிகார்ஜூன கார்கேவை விமர்சனம் செய்துள்ளார். சிடி ரவி தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளராக சிடி ரவி உள்ள தனது சொந்த மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவை சரமாரியாக கடும் சொற்களால் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி சிடி ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்தியாவின் சுந்திரத்துக்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் எந்த அடிமையாவது உயிர் தியாகம் செய்துள்ளார்களா? டம்மி தலைவர் கார்கே அவர்களே, இதுபற்றி ஏதாவது ஐடியா உள்ளதா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+