குட்பை.. வெறுப்பு வென்றுவிட்டது.. நான் ஓய்வு பெறுகிறேன்.. காமெடியன் முனாவர் ஃபாரூகி பரபர அறிவிப்பு
பெங்களூர்: இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி சில நாட்களுக்கு முன் கைதாகி விடுதலை செய்யப்பட்ட முனாவர் ஃபாரூகியின் காமெடி நிகழ்ச்சி நேற்று பெங்களூரில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டான்ட் அப் காமெடியில் இருந்து மொத்தமாக வெளியேறுவதாக முனாவர் ஃபாரூகி அறிவித்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த முனாவர் ஃபாரூகி கடந்த ஜனவரி 1ம் தேதி மத்திய பிரதேசத்தில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். கொரோனா விதிகளை மீறியதாகவும், அனுமதி இன்றி கூடியதாகவும் இவர் கைது செய்யப்பட்டார்.
அதோடு இந்து கடவுள்கள் குறித்து இவர் தவறாக காமெடி செய்ததாகவும், அமைச்சர் அமித் ஷா குறித்து இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் இவர் மீது பாஜக எம்எல்ஏ மாலினி லட்சுமணன் சிங்கின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் புகார் அளித்து இருந்தார்.

கைது
இதில் கைது செய்யப்பட்டவர் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். மத்திய பிரதேச நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இவர் ஜாமீன் பெற்றார். அதன்பின் விடுதலைக்கு பின் இவர் பெரிதாக எங்கும் காமெடி ஷோ செய்ய முடியவில்லை. பின்னர் சில நாட்களுக்கு முன் இவருக்கு நிறைய ஸ்டான்ட் அப் காமெடி ஷோ புக் ஆனது.

விடுதலை
ஆனால் முனாவர் ஃபாரூகியின் ஷோ திட்டமிடப்பட்ட இடங்களுக்கு முன்பே வந்த பல்வேறு இந்து அமைப்புகள் இவரின் நிகழ்ச்சியை நடத்த கூடாது எச்சரிக்கை விடுத்தன. அதோடு போலீசாருக்கும் இது தொடர்பாக புகார்களை அளித்தனர். இதை தொடர்ந்து முனாவர் ஃபாரூகி நடத்த இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சிக்கல்
கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்தியா முழுக்க இவர் நடத்த இருந்த 12 நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்தும் இந்து அமைப்புகள் காட்டிய எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும். நேற்று பெங்களூரில் இவரின் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. இதற்கு மோகன் கவுடா என்பவரின் இந்து ஜாக்ரான் சமிதி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

பெங்களூர் நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சி நடந்தால் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கலவரம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பெங்களூர் போலீஸ் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து, நிகழ்ச்சியை ரத்து செய்தது. இந்த நிலையில் ஸ்டான்ட் அப் காமெடியில் இருந்து மொத்தமாக வெளியேறுவதாக முனாவர் ஃபாரூகி அறிவித்துள்ளார்.

ஓய்வு
முனாவர் ஃபாரூகி வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. போதும்.. என்னால் இனியும் முடியாது. வெறுப்பு வென்றுவிட்டது. கலை இறந்துவிட்டது. தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வரும் எதிர்ப்புகள் காரணமாக இந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. நிகழ்ச்சி நடத்துவதில் இருந்து நான் வெளியேறுகிறேன். இனி நிகழ்ச்சி நடத்த மாட்டேன். நான் சொல்லாத ஜோக்கிற்காக கைது செய்யப்பட்டேன்.

வெறுப்பு வென்றுவிட்டது
இப்போதே நிகழ்ச்சி நடக்கும் முன்பே பிரச்சனை செய்கிறார்கள். மறைந்த நடிகர் புனீத் ராஜ் குமாரின் அறக்கட்டளைக்கு நிதி உதவி அளிக்கவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதை கூட அனுமதிக்கவில்லை. இது கொஞ்சம் கூட நியாயம் இல்லை. என் நேரம் முடிந்துவிட்டது. எல்லோருக்கும் குட் பை, என்று முனாவர் ஃபாரூகி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications