ஃபிளைட்டே பரவாயில்லை போலயே.. ஓ மை காட்.. ஊபர் டாக்ஸி கட்டணம் பார்த்தீங்களா.. புலம்பும் மக்கள்
ஊபர் சேவையின் கட்டணம் எகிறிவிட்டதாக பெங்களூர் மக்கள் புலம்புகிறார்கள்
பெங்களூரு: விமான சேவையைவிட ஊபர் டாக்சிக்கு டிமாண்ட் கூடிவிட்டதாம்.. இந்த புலம்பல் பெங்களூரு மக்களிடமிருந்து வெடித்து வருகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல. உலக அளவில் ஊபர் சேவை மீது அடிக்கடி புகார்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன..
இன்றைய துரித உலகில், சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை ஊபர் சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.. அதேசமயம், எத்தனையோ சர்ச்சைகள் ஊபர் குறித்தும் வந்துகொண்டே இருக்கிறது..

ஹர்ஷா
சாமான்ய மக்களைவிட, பிரபலங்கள் யாராவது, தாங்கள் ஊபரில் எதிர்கொண்ட சங்கடங்கள் குறித்து அடிக்கடி சோஷியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கம்.. அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு, புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே-வும் புகாரை ஊபர் மீது கூறியிருந்தார்.. 61 வயதாகும் ஹர்ஷா போக்ளே, ஊபர் காரை புக் செய்திருக்கிறார்.. ஆனால், புக் செய்தும்கூட, ஊபர் கார் டிரைவர் அவரை அழைத்துச் செல்ல வரவேயில்லையாம்..

ஃபிளைட் டிக்கெட்
பலமுறை அந்த ஊபர் டிரைவருக்கும், கஸ்டமர் கேருக்கும் போன் செய்தும் பதிலும் இல்லையாம். உரிய விளக்கமும் இல்லையாம்.. அதனால் பொறுமையிழந்த ஹர்ஷா, ட்வீட்டை போட்டு பொரிந்து தள்ளிவிட்டார். இப்போதும் ஒரு புகார் கிளம்பி உள்ளது.. இதே ஊபர் மீது.. அதுவும் நம்ம பெங்களூருவில் இருந்து கிளம்பி உள்ளது.. பெங்களூருவில் இருந்து மும்பை செல்லும் விமான டிக்கெட் 2058 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. ஆனால், இதுவே ஊபரை எடுத்துக் கொண்டால், அதே பெங்களூருவில் செல்ல, இந்த விமான டிக்கெட் விலையே வந்துவிடுகிறதாம்.

ஸ்கிரீன்ஷாட்
அதாவது, பெங்களூருவில் இருக்கும் 6 பேர், தன்னுடைய வீட்டில் இருந்து ஏர்போர்ட்டுக்கு செல்வதற்கு 2600 ரூபாய்க்கு மேலாகிவிடுகிறதாம்.. Ken Web வணிக செய்தி வெப்சைட்டின் மேனேஜிங் டைரக்டர் தர்மகுமார் இந்த தகவலை ஸ்கீரின் ஷாட் எடுத்து, அம்பலப்படுத்தி உள்ளார்.. இதை பார்த்த பலரும் அதிர்ந்து போய் உள்ளனர்.. அந்த ஸ்கிரீன் ஷாட்டில், பெங்களூரிலிருந்து மும்பைக்கு செல்லும் விமானங்களின் விலை ரூ.2,058 என்றுள்ளது.. இன்னொரு ஸ்கிரீன்ஷாட்டில் தர்மகுமாரின் தன்னுடைய வீட்டிலிருந்து கெம்பேகவுடா ஏர்போர்ட்டுக்கு ஊபரில் பயணம் செய்வது பதிவாகி உள்ளது.. அதில்இ, உபர் பிரீமியர் விலை ரூ.1,713 ஆக இருந்தது, மொத்தமாக 2,638 கட்டணம் வந்துள்ளது..

ஏர்போர்ட்
கடந்த செப்டம்பர் 12ம் தேதி இந்த ட்வீட்டை போட்டுள்ளார் தர்மகுமார்.. இந்த ட்வீட்தான் பெங்களூவார்வாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.. அத்துடன் மிகப்பெரிய விவாதத்தையும் சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டுள்ளது.. பலரும் தர்மகுமாருக்கு தங்கள் ஆதரவான கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.. ஒருசிலர், ஏர்போர்ட் சிட்டியில் இருந்து ஒன்றரை மணி நேரம் தொலைவில் இருப்பது சிரமமாக உள்ளது என்று புலம்பியுள்ளனர்..

காஸ்ட்லி
"பெங்களூரு எப்பவுமே காஸ்ட்லி நகரம்தான் என்றாலும், ஏர்போர்ட்டுக்கு செல்வதற்காக மலிவான விலையில், ரயில்வே விமான நிலைய இணைப்பு ரயில் அல்லது ஷட்டில் பஸ்களை இயக்கலாம்.. மும்பைக்கு பறப்பதை விட பெங்களூரு ஏர்போர்ட்டுக்கு செல்வதற்கு அதிக நேரம் ஆகிறதே" என்றெல்லாம் ட்விட்டர்வாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. ஆக, ஒன்றரை மணி நேர விமானப்பயணத்தைவிட, ஒரு மணி நேர டாக்சி பயணத்திற்கு 130 சதவீதம் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறதே என்று பெங்களூர்வாசிகள் நொந்து போய் உள்ளனர்..!












Click it and Unblock the Notifications