"என் மனைவியை கொன்னுட்டேன்.. ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க".. 5 பெண்களிடம் கெஞ்சிய டாக்டர்
பெங்களூர்: பெங்களூரில் தோல் மருத்துவராக இருந்த மனைவிக்கு அதிகளவில் மயக்க மருந்து கொடுத்து கொன்ற டாக்டரை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மனைவியை கொன்ற பிறகு அவர் 4-5 பெண்களுக்கு, ‛‛உனக்காக தான் மனைவியை கொன்றேன்.. ப்ளீஸ் என்னை திருமணம் செய்து கொள்'' என கெஞ்சி மெசேஜ் அனுப்பிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட அய்யப்பா லே-அவுட்டில் வசித்து வருபவர் மகேந்திரா. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் மணிப்பாலை சேர்ந்த இவர் டாக்டர் ஆவார். அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் இவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 2024 மே 26ம் தேதி திருமணம் நடந்தது. மனைவி பெயர் கிருத்திகா. இவரும் தோல்நோய் டாக்டராக இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி கிருத்திகா மர்மமான முறையில் இறந்தார். கணவர் மகேந்திரா பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறினர். ஆனால் கிருத்திகாவின் உறவினர்கள் விடவில்லை.
பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் தான் கிருத்திகா இறந்ததாக தெரியவந்தது. மேலும் கிருத்திகா இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு இரைப்பை அழற்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் மகேந்திர ரெட்டியும் டாக்டர் ஆவார். அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இதனால் அவர் ஜிஎஸ் சிகிச்சை அளித்தார். அப்போது IV மூலமாக மருந்து செலுத்தினார். அப்போது தான் மயக்கமருந்தை அதிகமாக கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 14ம் தேதி மகேந்திராவை போலீசார் கைது செய்தனர். உடுப்பி மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் திட்டமிட்டு கொலை செய்திருப்பதும், கிருத்திகாவுடன் வாழ பிடிக்காததால் அவர் அவரை தீர்த்து கட்டியதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி கிருத்திகாவை கொன்ற பிறகு அவர் குற்றத்தை உணரவில்லை. மாறாக அவர் 4-5 பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி காதல் பிச்சை கேட்டுள்ளார். அதாவது, ‛உனக்காக தான் என் மனைவியை கொன்றேன். என்னை திருமணம் செய்து கொள் ப்ளீஸ்' என மெசேஜ் அனுப்பி உள்ளார். மகேந்திராவின் செல்போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினர். அதில் உள்ள டேட்டாக்கள் மூலமாக முக்கிய தகவல் தெரியவந்துள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ‛‛மனைவியை கொன்ற டாக்டர் தனது பழைய உறவுகளை புதுப்பிக்க நினைத்தார். அவர் தனது பழைய தோழிகளுக்கு மெசேஜ் அனுப்பி பேச தொடங்கினார். சுமார் 4- 5 பெண்களுக்கு அவர் மெசஜே் அனுப்பி உள்ளார். குறிப்பாக மருத்துவ துறையில் பணியாற்றும் ஒருவருக்கு போன்பே செயலியில் மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த பெண் டாக்டர் இல்லை. வேறு பணி செய்கிறார். அவர் ஏற்கனவே மகேந்திராவை ஏற்க மறுத்தவர்.
இருப்பினும் இப்போது அனுப்பிய மெசேஜில், ‛என் மனைவியை உனக்காக தான் கொன்றேன்.. என்னை திருமணம் செய்து கொள்' என்று கூறியுள்ளார். அதை கேட்ட அந்த பெண் உடனடியாக ‛பிளாக்' செய்துள்ளார். இருப்பினும் பிற செயலிகள் மூலமாக அவரை தொடர்பு கொண்டுள்ளார். அனைத்தும் அவர் பிளாக் செய்துள்ளார்.
மருத்துவ துறையில் பணியாற்றி பெண்ணுக்கு அவர் மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த பெண்ணை அழைத்து விசாரித்தோம். அப்போது மகேந்திராவை அவரது திருமணத்துக்கு முன்பாகவே பிளாக் செய்ததாக தெரிவித்தார். அதன்பிறகு திருமணம் பற்றி அறிந்தார். இதையடுத்து அந்த பெண் மகேந்திராவுடன் பேசவில்லை. இப்போது மனைவியை கொன்றுவிட்டதாக கூறி மீண்டும் உறவை புதுப்பிக்க நினைத்தார். அந்த பெண் அவரிடம் பேசவில்லை.
தன்னிடம் பேசுவதற்காகவே மனைவியை கொன்றதாக மகேந்திரா கூறுகிறார் என்று அந்த பெண் நினைத்தார். அவருக்கு இந்த கொலை பற்றி எதுவும் தெரியாது. அதேபோல் 2023ம் ஆண்டு வரை மும்பையை சேர்ந்த பெண்ணுடன் மகேந்திரா தொடர்பில் இருந்தார். பலமுறை சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு கடந்த செப்டம்பரில் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு எனது மனைவி விரைவில் இறந்து விடுவாள் என்று ஜோதிடர் சொல்லி உள்ளார். என் காதல் உண்மையானது என கூறியுள்ளார். அதன்பிறகு மனைவி இறந்ததாக கூறி திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். இப்படியாக அவர் 4-5 பெண்களிடம் பேசியுள்ளார்'' என்றனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications