பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோமா? இன்போசிஸ் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்போசிஸ் ஊழியர்கள் பல ஆயிரம் பேர் பணி நீக்கம் ? நடவடிக்கை ஆரம்பம்

    பெங்களூர்: ஆயிரக்கணக்கான ஊழியர்களை இன்போசிஸ் பணி நீக்கம் செய்து வருவதாக வெளியான தகவல் குறித்து அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    உலகளாவிய மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தனது அலுவலகத்தில் பல மட்டங்களில் பணிபுரியும், ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    இன்போசிஸ் நிறுவனத்தில், தற்போது ஜே.எல் 6, ஜே.எல் 7 மற்றும் ஜே.எல் 8 டீம்களில் 30,092 ஊழியர்கள் உள்ளனர். இதில், சுமார், 2,200 பேர், பணிகளை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்போசிஸ் விளக்கம்

    இன்போசிஸ் விளக்கம்

    இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்கு மின்னஞ்சலில் இன்போசிஸ் பதில் வழங்கியுள்ளது.
    "ஒரு உயர் செயல்திறன் கொண்ட அமைப்பாக இன்போசிஸ், விளங்குகிறது. வர்த்தக நோக்கத்தில் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், பணிநீக்கம் என்பது, எந்தவொரு மட்டத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 'மாஸ்' அளவுக்கானதாக இல்லை." இவ்வாறு அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதேநேரம், சமீபத்தில், இதுபோன்ற எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்ற தகவலை நிறுவனம் வெளியிடவில்லை.

    நீக்கவில்லை

    நீக்கவில்லை

    அதிகாரப்பூர்வமற்ற எண்களுடன் தன்னிச்சையாக, ஊகங்கள் அடிப்படையில் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. நாங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவில்லை என்று இன்போசிஸ் வட்டாரங்கள் கூறுவதாக 'மின்ட்' என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    போதிய அவகாசம்

    போதிய அவகாசம்

    இன்போசிஸ் எடுத்த எடுப்பில், பணியாளர்களை பணி நீக்கம் செய்வதில்லை. இரண்டு வருடங்கள் அல்லது இரண்டு காலாண்டுகளாவது வாய்ப்பு தரப்பட்டு, ஊழியரின் திறமை மேம்படவில்லை என்றால்தான் பணி நீக்கம் செய்யப்படுகிறது. போதிய கால அவகாசம் கொடுக்கப்படுகிறது என்றும் இன்போசிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விப்ரோ வெளிப்படை

    விப்ரோ வெளிப்படை

    அதேநேரம், இன்போசிஸ் போட்டியாளரான விப்ரோ, பல்வேறு காரணங்களுக்காக, ராஜினாமா செய்யும் மென்பொருள் பொறியாளர்களின் எண்ணிக்கையையும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் எண்ணிக்கையையும், தொடர்ந்து வெளிப்படையாக வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    விவரம் தர முடியாது

    விவரம் தர முடியாது

    "நாங்கள் எங்கள் ஊழியர்களை பணியிலிருந்து வெளியேற சொல்லும் தகவல்களை பத்திரிக்கைகளுக்கு வழங்குவது இல்லை. அவை உள் நிறுவன செயல்முறைகள் என்பதால் எங்களால் புள்ளி விவரங்களை பகிர முடியாது" என்று இன்போசிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது என்கிறது மின்ட் நாளிதழ்.
    உலகெங்கிலும் உள்ள மற்ற நிறுவனங்களைப் போலல்லாமல், இன்போசிஸ் தனது தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு, திறமையை மேம்படுத்த போதிய கால அவகாசம் கொடுக்கிறது என்று இன்போசிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

    English summary
    Infosys clarifies on report of massive lay offs, here is the full detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X