பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூருவில் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைதுக்கு கமல்ஹாசன், சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூருவில் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைதுக்கு கமல்ஹாசன் கண்டனம்

    பெங்களூர்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பெங்களூருவில் தடையை மீறி போராட்டம் நடத்திய வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், லோக்சபா எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் மிக தீவிரமடைந்துள்ளன. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்களை ஒடுக்க செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    Kamal haasan condemns Historian Ramachandra Guha detained for staging protest against CAA

    கர்நாடகா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இன்று காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

    இந்நிலையில் பெங்களூரு டவுன்ஹால் பகுதியில் போலீசார் தடையை மீறி அமைதிவழியில் போராட்டம் நடத்திய வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா உள்ளிட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். ராமச்சந்திர குஹா கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்..

    லோக்சபா எம்.பி. சு. வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான‌ முறையில் போராடிய வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா இன்று பெங்களூரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் ராமச்சந்திர குஹா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டத்ற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அகமதாபாத்தில் முழு அடைப்பு-தடியடி

    குஜராத்தில் அகமதாபாத் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இடங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் போலீசார் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    English summary
    MNM President Kamal Haasan has condemned that the Noted Historian Ramachandra Guha detained for staging protest against CAA at Bengaluru.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X