சடலத்துடன் பாலியல் உறவு.. இது இயற்கைக்கு மாறான செயல்.. கர்நாடக மனுவை டிஸ்மிஸ் செய்த சுப்ரீம் கோர்ட்
பெங்களூர்: சடலத்துடன் உறவு கொள்வதை பாலியல் வன்முறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு, சுப்ரீம்கோர்ட்டில், கர்நாடக அரசு அப்பீல் செய்திருந்தது. இந்த மனுமீது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பை தந்துள்ளனர.
இறந்த உடல்களுக்கும் கண்ணியம் இருக்கிறது. இறந்த உடல்களை முறையாக அடக்கம் செய்தல், அந்த உடலுக்குச் சொந்தமானவர் உயிருடன் இருக்கும் போது அவர் விருப்பம் என்னவாக இருந்ததோ அதனை இறந்த பிறகு செயல்படுத்துதல் போன்றவற்றை அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு வலியுறுத்துகிறது.

உடலுறவு: அரசமைப்பு சட்டம் இவ்வாறிருக்க, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும்நிலையில், பெண்ணின் சடலத்தைகூட விடாமல், இளைஞர் ஒருவர் உடலுறவு கொண்டு, நாட்டையே வெலவெலக்க செய்துவிட்டார்.
கடந்த 2015-ல் நடந்த சம்பவம் இதுவாகும்.. கர்நாடகாவைச் சேர்ந்தவர் ரங்கராஜ். தன்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்த 21 வயது இளம்பெண்ணை ரங்கராஜ் கொலை செய்து, சடலத்துடன் உறவு கொண்டார். இதையடுத்து, அவர் மீது கொலை செய்ததற்கான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302, பலாத்காரம் செய்ததற்காக 375 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவானது.
ஹைகோர்ட்: விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய ஹைகோர்ட், "302வது பிரிவில் ரங்கராஜிக்கு தண்டனை விதித்தது. அதன்படி, ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. அதுகுறித்த விசாரணையில், சடலத்துடன் உறவு என்பது பிரிவு 375ன் கீழ் பலாத்காரம் ஆகாது, 377ம் பிரிவு இயற்கைக்கு மாறான உறவின் வரம்பில் வராது. பிரிவு 375, 377ஐ கவனமாக படித்தால், இறந்த உடலை மனிதன் அல்லது நபர் என்று அழைக்க முடியாது என்று விளக்கம் அளித்திருந்தது.
பலாத்கார வழக்கு: பலாத்கார வழக்கில் இருந்து ரங்கராஜ் விடுவிக்கப்பட்டார். சடலத்துடன் உடலுறவு கொண்டதை பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது என்றும், சடலத்துடன் உடலுறவு கொள்வது தவறில்லை என்ற நீதிமன்றத்தின் கருத்தும் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன.
இதை எதிர்த்து 2023ல் கர்நாடக அரசு, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தது. நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நேற்றைய தினமும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்தது.
இரு தரப்பு வாதங்கள்: அரசு சார்பில் ஆஜரான வக்கீல் அமன் பன்வார் வாதாடுகையில், "இறந்த ஒருவரால் பாலியல் செயல்களுக்கு சம்மதிக்க முடியாது என்பதால், சடலத்தை பலாத்காரம் செய்வதை, பிரிவு 375ன் கீழ் கொண்டு வர வேண்டும். இந்த பிரிவில் "உடல்" என்ற வார்த்தையையும் "இறந்த உடல்" என்று கருத வேண்டும். பிரிவு 375ஐ ஆழமாக சென்று பார்க்கக் கூடாது. இறந்த உடல்களுக்கு, கண்ணியமும், நியாயமும் வழங்கப்பட வேண்டும்,'' என்றார்.
பிரதிவாதி தரப்பிலும் அவரது வழக்கறிஞர் வாதாடினார்.. இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதிகள், "இந்த பிரச்னையை பார்லிமென்ட்தான் ஆராய வேண்டும். தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரலாம். இதுதொடர்பாக அரசு, பார்லிமென்ட்டிற்கு கடிதம் எழுதலாம்.
அதிரடி தீர்ப்பு: சடலத்துடன் உறவை குற்றமாக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. பிரிவு 377ல் திருத்தம் செய்ய வேண்டும். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நீதிமன்றம் உட்பட சர்வதேச நீதிமன்றங்கள் சடலத்துடன் உறவு கொள்வதை பாலியல் வன்கொடுமை வரம்பிற்குள் கொண்டு வர தண்டனை சட்டத்தின் பிரிவுகளை விரிவுபடுத்தி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனாலும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது. இதனால் கர்நாடக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications