சஸ்பென்ஸ் குமாரசாமி.. குதிரை பேர பயத்தில் காங்கிரஸ்.. என்ன செய்ய போகிறது பாஜக?
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மைக்கு சற்று அதிகமான இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பிராந்திய வாரியாக காங்கிரஸ், பாஜக, மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் முன்னிலை நிலவரத்தை பார்ப்போம்.
கர்நாடகா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடந்து முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 117 தொகுதிகளிலும், பாஜக 76 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி (குமாரசாமியின் கட்சி) 25 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் படி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அடுத்து கர்நாடகாவில் அடுத்த தங்கள் ஆட்சி தான் அமையப்போகிறது என்று காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி , நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
காங்கிரஸ் உத்தரவு: இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில், வெற்றி பெற்ற பின்னர் பெங்களூருவுக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இல்லாத கட்சித் தலைவர்களை அழைத்து வர ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குதிரை பேரத்தை முன்கூட்டியே தடுக்கும் நோக்கில் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை பெங்களூருவுக்கு அழைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன
ஹைதராபாத்தை ஓட்டியுள்ள கர்நாடகா பகுதிகளில் 21 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன. ஜேடிஎஸ் இரண்டு இடங்களிலும், இதர கட்சிகள் இரண்டு இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மத்திய கர்நாடாகவில் காங்கிரஸ் 15 இடங்களிலும், பாஜக ஏழு இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. கிரேட்டர் பெங்களூரு பகுதியில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், பாஜக 21 இடங்களிலும், ஜேடிஎஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. மும்பையை ஒட்டியுள்ள கர்நாடகா பகுதிகளில் காங்கிரஸ் 33 இடங்களிலும், பாஜக 15 இடங்களிலும், ஜேடிஎஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
கடலோர கர்நாடாகவில் காங்கிரஸ் 6 இடத்திலும் , பாஜக 15 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. ஓல்ட் மைசூரு பகுதியில் 32 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், பாஜக 4 இடங்களிலும், ஜேடிஎஸ் 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
பெங்களூரு ஊரகப்பகுதிகளில் காங்கிரஸ் 96 இடங்களிலும் பாஜக 45 இடங்களிலும், ஜேடிஎஸ் 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை 6 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
நகரப்பகுதிகளில் என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும், பாஜக 32 இடங்களிலும், ஜேடிஎஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
கர்நாடகா தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்து வரும் பாஜக இறுதி நிலவரம் வரட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறது மறுபக்கம் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் குதிரைபேர பயத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம் குமாரசாமி கிங்மேக்கர் ஆகும் ஆசையில் இருக்கிறார். ஆனால் கள நிலவரம் தற்போது வரை காங்கிரஸ் கட்சிக்குத்தான் சாதகமாக உள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications