பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்படி கேக் கட் பண்றேன் பாருங்க.. அதிர வைத்த பாஜக எம்எல்ஏ மகன்.. "பணத் திமிர்" என காங்கிரஸ் விளாசல்

Google Oneindia Tamil News

பெங்களூர்: தேர்தலில் போட்டியிட பணமே இல்லை என்று கூறி பொது மக்களிடம் நிதி திரட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ மகன், தனது லேட்டஸ்ட் ஆப்பிள் ஐபோனை கத்திக்கு பதிலாக பயன்படுத்தி கேக் கட் செய்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்து அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ பசவராஜ் தாதேசுகுர் தனது மகனின் செயலில் தப்பில்லை எனக் கூறி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நான் எப்படி தனியா இருப்பேன்.. மனைவி இறந்த துக்கம் தாளாமல் உயிரிழந்த கணவர்.. திருச்சியில் உருக்கம்நான் எப்படி தனியா இருப்பேன்.. மனைவி இறந்த துக்கம் தாளாமல் உயிரிழந்த கணவர்.. திருச்சியில் உருக்கம்

எம்எல்ஏ மகன்

எம்எல்ஏ மகன்

கனககிரி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பசவராஜ் தேதேசுகுர் 2வது மகன் பெயர், சுரேஷ். இவருக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்துள்ளது. அதை தனது நண்பர்களோடு ஜாலியாக கொண்டாட முடிவு செய்துள்ளார் சுரேஷ். பிஎம்டபிள்யூ 520டி வகை சொகுசு காரில் நண்பர்களோடு கனககிரி, காரடகி போன்ற பகுதியில் ஜாலியாக காரில் சுற்றி திரித்துள்ளார். பிறகு ஹோசபேட் என்ற பகுதிக்கு அருகேயுள்ள ஒரு இடத்தில் நண்பர்கள் ஒன்று கூடி பிறந்த நாள் கொண்டாடினர்.

வரிசையாக வைத்த கேக்குகள்

வரிசையாக வைத்த கேக்குகள்

அப்போது ஹேப்பி பர்த்டே சுரேஷ் என்ற ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு கேக்காக வடிவமைக்கப்பட்டு நீண்ட டேபிளில் வைக்கப்பட்டன. வழக்கமாக வெட்டப்படும் கேக்கும் வைக்கப்பட்டது. இத்தனை கேக்குகளையும், தனது லேட்டஸ்ட் மாடல் ஐபோனை பயன்படுத்தி வெட்டினார் சுரேஷ். கையை எடுக்காமல் அத்தனை கேக் மீதும் வரிசையாக கோடு போட்டதை போல வெட்டிச் சென்றார் அவர்.

பணத் திமிர் என விமர்சனம்

பணத் திமிர் என விமர்சனம்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இத்தனை கேக்குகள் இத்தனை சிலருக்காக வீணடிக்கப்பட்டதாக பார்த்தவர்கள் குமுறுகிறார்கள். அது மட்டுமல்ல ஐபோனால் வெட்டுவது பணத் திமிரை காட்டுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் அளித்த பேட்டியில், தங்கள் பணத்திமிரை மோசமாக காட்டும் கலாச்சாரம் இது. பல மக்கள் கொரோனா காலத்தில் சாப்பிட உணவு இல்லாமல் தவிக்கும் நிலையில், இப்படி பாஜக எம்எல்ஏ மகன் செய்துள்ளது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு வக்காலத்து

மகனுக்கு வக்காலத்து

இதில் கொடுமை என்னவென்றால், தனது மகன் செய்தது தப்பு இல்லை. கத்திக்கு பதில் போனை பயன்படுத்தியுள்ளார் அவ்வளவுதானே. கொரோனா இருக்கு பாருங்க. அதனால் இதுதான் சேப்ஃடி என்று கூலாக கூறியுள்ளார் பசவராஜ். இத்தனைக்கும் தேர்தலுக்கு முன்பு தன்னிடம் பணம் இல்லை என சோகமாக முகத்தை வைத்து மக்களிடம் பணம் திரட்டி போட்டியிட்டவர் இவர். 2 முறை தோற்ற இவரை இந்த முறை மக்கள் தேர்ந்தெடுத்தனர். எம்எல்ஏவானதுமே விலை உயர்ந்த கார்களை வாங்கி தனது ஜம்பத்தை ஆரம்பித்தவர்தான் பாஜக எம்எல்ஏ பசவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka BJP MLA's son, cutting 8 cakes with an iPhone, video doing rounds on social media Kanakagiri BJP MLA Basavaraj Dadesugur's son Suresh Dadesugur cutting his birthday cake with the latest iphone model has gone viral on social media. Many on social media have expressed their disgust over the act. MlA has defended the act of his son. Saying it's his money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X