மாமியார்- நாத்தனார் தலையில் முட்டும் மருமகள்கள்.. கர்நாடகாவில் வினோத திருவிழா.. சுவாரசிய பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் மாமியார் - மருமகள் சண்டை, நாத்தனார் - மருமகள் சண்டையை போக்கி குடும்பம் செழிக்க வேண்டி ஒவ்வொரு மருமகளும் தங்களின் மாமியார் - நாத்தனாரின் தலையில் முட்டிக்கொண்டு கொண்டாடிய திருவிழா அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த திருவிழாவின் சுவாரசிய பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
கிராமம் என்றாலே நம் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வரும். அமைதியான வாழ்க்கை.. தூய்மையான காற்று.. சுத்தமான குடிநீர், வாகன நெரிசல் இல்லாத சாலை, ஆடு - மாடு உள்ளிட்ட கால்நடைகளின் சத்தம் என ஒருவித உற்சாகத்தை கொடுக்கலாம்.

அதோடு கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களை காண இரண்டு கண்கள் போதாது. ஒவ்வொரு கிராமங்களிலும் வித்தியாசம் வித்தியாசமாக திருவிழாக்கள் நடக்கும். இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் உள்ள கிராமத்தில் நடந்த திருவிழா தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.
மாமியார்- மருமகள் பிரச்சனை
இதற்கு முக்கிய காரணம் மாமியார்- மருமகள் - நாத்தனார் என அனைவரும் ஒரே திருவிழாவில் பங்கேற்று தலையால் முட்டிக்கொண்டு திருவிழாவை கொண்டாடியது தான். பெரும்பாலான வீடுகளில் மருமகளுக்கும், மாமியாருக்கும் இடையே பிரச்சனைகள் இருக்கும். அதேபோல் மருமகளுக்கும், அவரது நாத்தனார்களுக்கும் இடையே மனக்கசப்பு இருக்கும்.
கணவன்களுக்கு பிரச்சனை
இதில் மாட்டிக்கொண்டு தவிப்பது கணவன்மார்கள் தான். தாய் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம், அக்காள் - தங்கை இன்னொரு பக்கம் என்று இவர்களுக்குள் நடக்கும் பிரச்சனையில் யார் பக்கம் நிற்பது? என்பதே ஒவ்வொரு கணவன்களுக்கும் பெரும் சவாலாக இருக்கும். இதனை மையப்படுத்தி பல திரைப்படங்கள், சீரியல்கள் வந்து சூப்பர் ஹிட் அடித்துள்ளன.
தலையால் முட்டும் திருவிழா
ஆனாலும் கூட இன்னும் பல வீடுகளில் இந்த பிரச்சனைகள் உள்ளது. இதற்கிடையே தான் மாமியார் -மருமகள் - நாத்தனார் இடையே பிரச்சனை கூடாது. அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒருவரையொருவர் தலையால் முட்டிக்கொண்ட திருவிழா அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
3 நாள் திருவிழா
இந்த திருவிழா சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகா சிக்கீரண்ணா மாளிகே கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக திருவிழா நடக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் 3 நாள் திருவிழா கோலாகலமாக நடந்தது. வீதியெங்கும் தோரணங்கள்.. வரவேற்பு அலங்காரங்கள், சீரியல் பல்புகள் என்று திருவிழா களைகட்டியது. இந்த திருவிழாவில் ஆண்கள் தங்கிளன் கிடாக்களை கொண்டு வந்து மோதவிட்டு ரசிப்பார்கள்.
'டிக்கி ஹப்பா'
அதன்பிறகு பெண்களுக்கான 'டிக்கி ஹப்பா' திருவிழா தொடங்கும். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மாமியாரும், மருமகள்களும் தங்களின் தலையை மாற்றி மாற்றி முட்டிக்கொள்வார்கள். அதேபோல் மருமகளும் - நாத்தனாரும் தலையை முட்டிக்கொள்வார்கள்.
இப்படி செய்வதன் மூலமாக மாமியார் - மருமகள், மருமகள் - நாத்தனார் இடையே பிணைப்பை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை அந்த கிராம மக்களுக்கு உள்ளது. மேலும் சண்டைகள் மறந்து குடும்பம் செழிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
பழங்குடி மக்கள்
இந்த 'டிக்கி ஹப்பா' காலம் காலமாக பாரம்பரியம் மாறாமல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இங்கே வசித்து வரும் பழங்குடியின மக்கள் தான் இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த திருவிழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் வந்து 'டிக்கி ஹப்பா' திருவிழாவில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மனக்கசப்புக்கு தீர்வு
இந்த கிராமத்து பெண்கள், எவ்வளவு தூரத்தில் திருமணம் செய்து சென்று இருந்தாலும் திருவிழாவை 'அட்டர்ன்' செய்கிறார்கள். மாமியார் - மருமகள், மருமகள் - நாத்தனார் இடையே எந்த மனக்கசப்பு இருந்தாலும் இந்தத் திருவிழாவில் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடி ஒன்றாகி விடுகின்றனர்.
பங்கேற்காவிட்டால் தலைவலி
இந்த விழாவில் கலந்துகொள்ளாதவர்களுக்கு லேசான தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவேதான் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதாக என அந்த கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா கூறுகிறார். அந்த வகையில் தான் இந்த ஆண்டும் 'டிக்கி ஹப்பா' சிறப்பாக முடிவடைந்து அதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications