காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு! கர்நாடகாவில் விடிய விடிய போராட்டம்.. டெல்லி செல்லும் சிவக்குமார்
பெங்களூர்: காவிரி நதியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழ்நாடு - கர்நாடக இடையே அவ்வப்போது பிரச்சினை எழுந்து வந்தது. இதனால், தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துடன் காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றன. இந்த நிலையில், போதிய மழை இல்லை என்பதை காரணம் கூறி கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டு பிடித்து வருகிறது. இதனால், கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரியில் உரிய நீரை திறந்து விட வலியுறுத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது , தண்ணீர் வழங்குவதில் கர்நாடக அரசின் செயல்பாடுகள் மற்றும் அணைகளின் தற்போதைய நீர் இருப்பு விவரங்களை செப்டம்பர் 1-ந் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தமிழகம் மற்றும் கர்நாடக கோரிக்கை தொடர்பாக விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என
காவிரி மேலாண்மை ஆணையம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தலாம் என ஒழுங்காற்றுக்குழு முடிவு செய்தது. இந்த முடிவு, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை அப்படியே ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்கள் காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் சில விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மாண்டியா பகுதியில் நேற்று காலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடைபெற்றது. மெழுகு வர்த்தி ஏந்தி விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ தர்ஷன் புட்டனையாவும் இந்த போராடத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கிடையே, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications