அந்தரங்க போட்டோ.. ஐஏஎஸ் ரோகினியுடன் மோதல்! ஹைகோர்ட் ஆர்டரால் கர்நாடகா ஐபிஎஸ் ரூபாவுக்கு சிக்கல்
பெங்களூர்: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க போட்டோக்களை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது பேஸ்புக்கில் பகிர்ந்து 19 குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரோகினி சிந்தூரி ரூபாவுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் ஐபிஎஸ் ரூபாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரூபா. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரபரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது ரூ.1 கோடி வாங்கி கொண்டு அவருக்கு சிறை அதிகாரிகள் சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாக புகார் தெரிவித்து பிரபலமானார்.

அதேபோல் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரோகினி சிந்தூரி. இந்நிலையில் கடந்த கடந்த பிப்ரவரி மாதம் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கும், ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது.
அதாவது ரோகினி சிந்தூரியின் தனது தனிப்பட்ட (அந்தரங்கம்) படங்களை 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார் என ரூபா ஐபிஎஸ் குற்றம்சாட்டினார். மேலும் ரோகினி சிந்தூரி அனுப்பியதாக கூறி 7 போட்டோக்களை ரூபா தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். அதோடு ரோகினி சிந்தூரி, முன்னாள் அமைச்சரான சாரா மகேசை உணவகத்தில் சந்தித்தது போன்ற போட்டோவையும் பகிர்ந்து விமர்சனம் செய்திருந்தார். அதோடு 19 முக்கிய குற்றச்சாட்டுகளை ரோகினி சிந்தூரி மீது ரூபா ஐபிஎஸ் கூறியிருந்தார்.
இது இரு அதிகாரிகள் இடையே கடும் மோதல் போக்கை ஏற்படுத்தியது. அதோடு ரோகினி சிந்தூரி தன்மீதான ரூபாவின் குற்றச்சாட்டுகளை முற்றுலுமாக மறுத்தார். அதோடு ரூபா ஐபிஎஸ் மனநலம் பாதித்தவர் என ரோகினி சிந்தூரி விமர்சனம் செய்தார். இருவரும் பொதுவெளியில் மோதிக்கொண்டனர். இதையடுத்து இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் இரு அதிகாரிகளும் கர்நாடகா தலைமை செயலாளரிடம் தனித்தனியே புகார்கள் வழங்கி இருந்தனர். இதற்கிடையே தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக ரூபா ஐபிஎஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இதை செய்யவிட்டால் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் ரூபா ஐபிஎஸ் மன்னிப்பு கோரவில்லை. இதையடுத்து ரோகினி சிந்தூரி பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூபாவுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் ரூபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். மேலும் இந்த வழக்கில் ஜாமீனும் அவரும் பெற்றார்.

இத்தகைய சூழலில் தான் தனக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ரூபா ஐபிஎஸ் சார்பில் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சீனிவாஸ் ஹரீஸ் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ரூபா ஐபிஎஸ் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு ரோகினி சிந்தூரி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சீனிவாஸ் ஹரீஸ் குமார் ரூபா ஐபிஎஸ்ஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ரூபா ஐபிஎஸ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ரோகினி சிந்தூரி ஐஏஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கை அவர் எதிர்கொள்ள வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications