ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்து.. மாணவிகளை பலாத்காரம் செய்த கர்நாடகா மடாதிபதி.. வெளியான ஷாக் தகவல்
பெங்களூர்: ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு பள்ளி மாணவிகளை கர்நாடகா மடாதிபதி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததும், அவருக்கு உடந்தையாக விடுதியின் பெண் வார்டன் இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் ஏராளமான மடங்கள் உள்ளன. இதில் சித்ரதுர்கா மாவட்டம் முருகா மடமும் உள்ளது. மாநிலத்தில் முக்கிய பிரிவு மக்களாக உள்ள லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தது தான் இந்த மடம்.
இதனால் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் இந்த மடத்துக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் தங்கும் வசதியுடன் கூடிய உண்டு, உறைவிட பள்ளி உள்ளது.

மடாதிபதி மீது பாலியல் புகார்
இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருக சரணாரு உள்ளார். இந்த மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் படித்த வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பயிலும் மாணவிகள் விடுதியில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு மீது பாலியல் புகார் எழுந்தது. இவர் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு மயக்கமருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது.

போக்சோ வழக்கில் கைது
இதனால் மாணவிகள் 2 பேர் விடுதியில் இருந்து வெளியேறி பெங்களூர் வழியாக மைசூர் சென்றனர். மாணவிகளை தொண்டு நிறுவனம் மீட்டது. சம்பவம் குறித்து அறிந்த தொண்டு நிறுவனம் மடாதிபதி மீது மைசூர் நசர்பாத் போலீசில் புகார் செய்தது. இநு்த புகார் சித்ரதுர்கா மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையின்போது மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு மீதான புகார் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ம் தேதி போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.

2வது வழக்கு
இதற்கிடையே தான் கடந்த அக்டோபர் மாதம் 19 ம் தேதி மீண்டும் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு மீது இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்ப்டது. பெண் சமையல் தொழிலாளியின் 2 மகள்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் இந்த 2வது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மடாதிபதி சிவமூர்த்தி முருகு சரணாரு உள்பட 7 பேர் மீது வழக்கு பாய்ந்தது. உடந்தையாக இருந்ததாக கூறி சிறுமிகளின் விடுதி வார்டன் ரஷ்மி 25, என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்நிலையில் தான் கைதான மடாதிபதி சிவமூர்த்தி முருகசரணாரு பற்றிய திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது முதல் வழக்கில் ஆகஸ்ட் மாதம் 27 ம் தேதி பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பாக போலீசார் 694 பக்க குற்றபத்திரிகையை போலீசார் மாவட்ட 2வது கூடுதல் மற்றும் செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ஆப்பிள் பழத்தில் மயக்க மருந்து..
இந்த குற்றப்பத்திரிகையில் மடாதிபதி உள்பட 3 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சம்பவம் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி மாணவிகளுக்கு ஆப்பிளில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பலாத்காரம், பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது. மீறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அவர் நேரடியாக மிரட்டவில்லை. தான் கடவுளாக இருக்கிறேன். எனக்கு சேவை செய்ய மறுத்தால் நான் சபிப்பேன். இதனால் மாணவியும், மாணவிகளின் குடும்பமும் அழிந்துவிடும் என மிரட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அனுப்பி வைத்த வார்டன் ரஷ்மி
இதுபற்றி சித்ரதுர்கா மாவட்டம சூப்பிரண்டு பரசுராம் கூறுகையில், ‛‛அக்கா மகாதேவி விடுதியில் மாணவிகள் தங்கி பிடித்து வருகின்றனர். வார்டனாக ரஷ்மி உள்ளார். இவர் இரவு 8 மணிக்கு பிறகு மாணவிகளை மடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு மாணவிகளுக்கு மடாதிபதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகள் எதிர்க்கும்போது மயக்கமருந்து கலந்த ஆப்பிள்களை கொடுத்துள்ளார். முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2வது வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications