குறிவைக்கப்படும் எம்எல்ஏக்கள்.. கர்நாடகாவில் களைகட்டிய ‛குதிரை பேரம்’.. போலீசுக்கு ஓடிய காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பணம் தருவதாக கூறி குதிரை பேரத்தில் பாஜக, ஜேடிஎஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவிடம் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ராஜ்யசபாவுக்கு ஒவ்வொரு மாநிலங்களின் எம்எல்ஏக்கள் மூலம் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்காலம் என்பது 6 ஆண்டுகளாகும்.

அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக இருந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர், ஹனுமந்தய்யா ஆகியோரின் இவர்களது பதவி காலம் ஏப்ரல் மாதம் 2ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இதையடுத்து அந்த 4 இடங்களுக்கும் வரும் 27ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொருளாளரான அஜய் மக்கான், நசீர் உசேன், ஜிசி சந்திரசேகர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பாஜக சார்பில் நாராயண பாண்டகே மனுத்தாக்கல் செய்தார்.
இவர்கள் 4 இடம் காலியாக உள்ள நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டது. அதாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டியும் ஜேடிஎஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்தார். இதனால் 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிடுவது உறுதியானது.
வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை திரும்ப பெற இன்று கடைசி நாளாகும். இத்தகைய சூழலில் 5 பேரும் வாபஸ் பெறவில்லை. இதனால் ராஜ்யசபா எம்பி தேர்தல் திட்டமிட்டப்படி 27 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் எம்எல்ஏக்கள் ஓட்டளித்து ராஜ்யசபா எம்பிக்களை தேர்வு செய்ய உள்ளனர். கர்நாடகாவை பொறுத்தமட்டில் ராஜ்யசபா எம்பியாக தேர்வாக வேட்பாளர் ஒருவருக்கு 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியின் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. பாஜகவுக்கு 66 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் அந்த கட்சியின் வேட்பாளரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஜேடிஎஸ் கட்சி புதிய திட்டமிட்டுள்ளது. அதாவது ஜேடிஎஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். மாறாக பாஜகவின் மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் வெற்றி பெறும் முனைப்பில் ஜேடிஎஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும் ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் ஜேடிஎஸ் கட்சிக்கு பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு உறுதியாகி உள்ள நிலையில் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் ஓட்டுகளை வாங்க ஜேடிஎஸ் திட்டமிட்டு வருகிறது. இதற்காக காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்களிடம் அந்த கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்களை ஜேடிஎஸ் கட்சியின் வேட்பாளரான குபேந்திர ரெட்டிக்கு ஓட்டளிக்கும்படி ஆசைவார்த்தை கூறி குதிரை பேரம் நடப்பதாக பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவிடம் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் எம்எல்ஏக்களான லதா மல்லிகார்ஜுன், கவுரிபிதனூர் புட்டரசாமி கவுடா மற்றும் தர்ஷன் புட்டண்ணா ஆகியோரிடம் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளர் குபேந்திர ரெட்டிக்கு ஓட்டளிக்கும்படி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குபேந்திர ரெட்டிக்கு ஓட்டளித்தால் பணம் வழங்கப்படும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டுகின்றனர். பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications